Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 13 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் ஆடைத்தொழிற்துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஸ்ரீயானி டிரெஸ் பொயின்ட், தனது 2,500 ஊழியர்களுடன் மேதினக் கொண்டாட்டத்தை அண்மையில் கண்டி, நித்தவெல விளையாட்டு மைதானத்தில் சிறப்பாகக் கொண்டாடிக் குதூகலித்தது.
பாரம்பரிய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளை ஊழியர்கள் தமக்கிடையில் நாடாத்தியதுடன், கிளைகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறந்த காட்சியறை, சிறந்த காட்சியறை முகாமையாளர், செயற்திறனுடன் கூடிய சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய ஊழியருக்கான விருது உட்பட, போட்டிகளில் வெற்றிபெற்றோருக்குப் பெறுமதிமிக்க பல விருதுகளும் வழங்கப்பட்டன. யாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல், ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய வீடு ஒன்று, நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் சபையால் சிறந்த ஊழியருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கேகாலையில் 25 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீயானி டிரெஸ் பொயின்ட் நிறுவனம், இன்று கண்டி, மாத்தளை, குருநாகல் ஆகிய பிரதான நகரங்கள் உட்பட, சுமார் ஏழு கிளைகளைத் தன்னகத்தே கொண்டு சிறப்புடன் இயங்கி வருகின்றது.
சர்வதேச தரம் கொண்ட ஆடை வகைகளை, சகல வாழ்க்கைத் தரம் கொண்ட மக்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையில் விற்பனை செய்வதே, தமது வெற்றிக்கான காரணம் என ஸ்ரீயானி டிரெஸ் பொயின்டின் தலைவர் எம். செல்வராஜ் தெரிவிக்கிறார்.
32 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago