Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 12 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வியமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட LAUGFS Nana Maga கணித பயிற்சி முகாம்களின் மூலமாக, திறன் மேம்பாடுகளினூடாக 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, அவர்களுடைய கணித அறிவை வலுப்படுத்துவதற்கு உதவியுள்ளதன் மூலமாக, மற்றுமொரு சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
10ஆவது நிகழ்ச்சித்திட்டமானது, அண்மையில் மாத்தறையில் நடத்தப்பட்டதுடன், 150க்கும் மேற்பட்ட க.பொ.த (சாதாரண தர) மாணவர்கள் இதில் பங்குபற்றியுள்ளனர்.
க.பொ.த (சாதாரண தர) மாணவர்கள் மத்தியில் கணித அறிவைப் பெருக்கும் ஒரு விசேட கல்விச் செயற்றிட்டமாக, கல்வியமைச்சின் கணித பாடப் பிரிவுடன் இணைந்து, கடந்த ஆண்டில் LAUGFS Nana Maga கணித பயிற்சி முகாம்கள் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
“எமது மாணவர்களின் தகுதி மற்றும் திறன்களை தொடர்ச்சியாக மேம்படுத்துவதே எமது நோக்கமாகும். எந்தவொரு தொழிலைப் பொறுத்தவரையிலும், பகுப்பாய்வுத் திறன்களை வளர்க்க உதவுகின்ற ஒரு பிரதான பாடமாக கணிதம் காணப்படுகின்றமையால், தொழில் வாழ்வில் வளர்ச்சி காண்பதற்கு அது அத்தியாவசியமாகும்” என்று கல்வியமைச்சின் செயலாளரான சுனில் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
“முதற்கட்டத்தில் தெற்கு மாகாணத்தில் உள்ள 29 பாடசாலைகளில் இந்நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்க நாம் அணுசரனையளித்துள்ளோம். மாணவர்கள் இப்பாடத்தில் ஆழமான அறிவைப் பெற்று, புதிய கணித பிரயோக நுட்பங்களைக் கற்று, அவற்றை வளர்த்துக்கொள்ள இந்த அமர்வுகள் உதவியுள்ளன. தரமான கல்வியை வழங்க வேண்டியது மிகவும் முக்கியமானது. எமது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இளம் தலைமுறையினருக்கு வலுவான அத்திவாரத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
விரைவுபடுத்தப்பட்ட போதனா முறைமை மற்றும் செயற்பாடு-அடிப்படையிலான கற்றல் நுட்பங்களைப் பின்பற்றி, கற்பதற்கு உகந்த ஒரு சூழலில் முழுமையான மற்றும் இடைச்செயற்பாடுகள் கொண்ட கற்றல் அமர்வுகள் இந்த மூன்று நாள் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்படுகிறது.
“என்னைப் பொறுத்தவரையில் கணித பாடமானது, கற்பதற்கு எப்போதும் கடினமான ஒன்றாகவே காணப்பட்டது. எனினும், இந்த பயிற்சி முகாமின் போது ஆசிரியர்களால் நடாத்தப்பட்ட பல்வேறு அமர்வுகள் நாம் சிரமப்பட்ட குறிப்பிட்ட சில பாட பயிற்சிகளை இலகுவான வழிகளில் கற்றுக்கொள்ள எமக்கு உதவியுள்ளன. கணிதப் பாடத்தைக் கற்பது இந்த அளவிற்கு ஆர்வமூட்டுகின்ற மற்றும் மகிழ்ச்சியளிக்கும் விடயமாக அமையும் என்று நான் ஒரு போதும் எண்ணியது கிடையாது” என்று கணித பயிற்சி முகாம்களில் பங்குபற்றிய மாணவர்களில் ஒருவரான ஜீவாந்த சந்தருவன் கருத்து வெளியிட்டார்.
இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டத்தில் 3,000 துணை அலகுகளை கல்வியமைச்சிடம் LAUGFS கையளித்துள்ளதுடன், எல்பிட்டிய, அஹங்கம, அம்பலாங்கொட, திக்குபுர, பலப்பிட்டிய, தங்காலை, கொட்டப்பொல, மாத்தறை, அக்குரஸ்ஸ, கம்புருகமுவ ஆகிய இடங்களில் நடாத்தப்பட்ட கணித பயிற்சி முகாம்களின் போதும் மற்றும் பிரதேசத்திலுள்ள ஏனைய பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கும் அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago