2025 மே 21, புதன்கிழமை

தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கியுடன் இரு பெண்கள் கைது

Editorial   / 2025 மே 21 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த துப்பாக்கி, செவ்வாய்க்கிழமை (20) மாலை கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விசாரணைகளின் போது, அந்த துப்பாக்கி தங்கமுலாம் பூசப்பட்டது என்பது கண்டறியப்பட்டது.

 

வளாகத்தில் கடமையில் இருந்த  பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வழங்கிய  ரகசிய தகவலைத் தொடர்ந்து அந்த ஆயுதம் கைப்பற்றப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .