2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

எமிரேட்ஸ் விமான சேவையில் தமிழ் அலைவரிசைகள்

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகப்பெரிய விமான சேவையான எமிரேட்ஸ் பல்வேறு நாட்டவர்களுக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு தமிழ், சிங்கள மொழிப் பாடல்களை கேட்டு மகிழ்வதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளது.  

உலகம் முழுவதும் இலங்கையின் கலாசாரத்தை எமிரேட்ஸ் உயரத்துக்கு கொண்டு செல்கின்றது. எமிரேட்ஸின் ice சேவை (Information, Communications, Entertainment – தகவல், தொலைத்தொடர்பு, களியாட்டம்) ஊடாக இது சாத்தியமாகி உள்ளது. நான்கு சிங்கள திரைப்படங்களும் 13 சிங்கள இசை அலைவரிசைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சொர்க்கபுரியில் இருந்து பயணம் மேற்கொள்ளும் சகல தரப்பு பயணிகளையும் இது மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.  

எமிரேட்ஸ் விமானங்களின் ice சேவையில் பிம்பா தேவி, யஷோதரா, கலாநிதி நவரியன், பொரிசாதய, நிளஞ்சன போன்ற நகைச்சுவை, வரலாறு,  காதலை உள்ளடக்கிய படைப்புக்கள் இணைக்கப்படடுள்ளன.  

பண்டிதர் W.D. அமரதேவ, விக்டர் ரத்நாயக்க, நன்தா மாலினி போன்றோரின் சாஸ்திரிய சங்கீதம், என்றும் இனிமையான கிளரன்ஸ் விஜேவர்தன, கீர்த்தி பஸ்குவெல், ஜனநாத் வரகாகொட, பிரெடி சில்வா, C.D. பொன்சேகா ஆகியோரின் பாடல்கள், தீபிகா பிறியதர்ஷனி பீரிஸ், ஷானிகா சுமணசேகர, பிறியானி ஜயசிங்க, ஷஷிகா நிசன்ஸல ஆகியோரின் பாடல்களும் ice இசைத் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன  

தமிழ் பேசும் பயணிகளுக்காக பெரும்பாலான இலங்கை ரசிகர்களால் விரும்பப்படும் 10 தமிழ் திரைப்படங்களும், இரண்டு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், A.R. ரஹ்மானின் இசை அலைவரிசை உட்பட இரண்டு இசை அலைவரிசைகளும் இணைக்கப்பட்டுள்ளன.  

“160க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விமான சேவைகளை மேற்கொள்ளும் உலகளாவிய விமான சேவை உள்ளுர், பிராந்திய மட்டங்களில் பயணிகளின் ரசனைக்கு விருந்து வழங்கும் வகையில் பயணிகள் பறந்து கொண்டிருக்கும் போதும் தமது வீடுகளில் இருப்பது போன்ற உணர்வினை வழங்கும் நோக்கில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று எமிரேட்ஸின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிராந்திய முகாமையாளர் சந்தன டி சில்வா கூறினார்.

“இலங்கைப் பயணிகள் பலருக்கு இந்த முயற்சிகள் பற்றி இன்னமும் சரியாகத் தெரியாது. ஓவ்வொரு மாதமும் வெளியிடப்படும் புத்தம் புதிய ஹொலிவூட் திரைப்படங்களைப் பலரும் தெரிவு செய்கின்றனர். இந்நிலையில் உள்ளூர் சேர்க்கைகள் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கக் கூடியது. இது இலங்கையர்களை நிச்சயம் பெருமை அடையவும் செய்யும்” என்று அவர் மேலும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X