2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எயார்டெல் தலைமைத்துவ குழுவுக்கு 3 விருதுகள்

Gavitha   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைந்த தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்களான எயார்டெல் லங்கா 'சிறந்த முகாமையாளர்களைக் கொண்ட நிறுவனம்' என அண்மையில் இடம்பெற்ற 2020 சிறந்த முகாமையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் தெடர்ச்சியாக மூன்றாவது முறையும் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதன்பிரகாரம், நிறுவனத்தின் தலைமைத்துவக் குழுவினர், மூன்று விருதுகளை வென்றெடுத்தனர்.

அதன்படி, எயார்டெல் லங்கா சேவை நடவடிக்கைகள் மற்றும் இடர் முகாமைத்துவம் குறித்து சிரேஷ்ட முகாமையாளர் - சமிந்த வனசிங்க, சட்டம் மற்றும் ஒழுங்குவிதி பிரிவு தொடர்பிலான சிரேஷ்ட முகாமையாளர் - சேனானீ இருகல்பண்டார மற்றும் பிற்கொடுப்பனவு விற்பனைப் பிரிவு பிரதானி - இஸ்ஃபார் அன்வர்டீன் ஆகியோர் நிறுவனத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் கொண்ட குழுக்களின் வெற்றிகரமான நடவடிக்கைகளுக்கு, அவர்கள் செய்த பங்களிப்புகளுக்காகவே இந்த விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமது குழுவினர் பெற்ற வெற்றியைக் கொண்டாடுகையில் கருத்து தெரிவித்த பாரதி எயார்டெல் லங்காவின், பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷீஷ் சந்திரா, “ஒரு வளமான கலாசார பின்னணியைக் கொண்ட நிறுவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறித்து நாம் மிகுந்த பெறுமையடைகிறோம். இவ்வாறு தொடர்ச்சியான வரவேற்கப்படுவது இலங்கையில் சிறந்த சேவை நிறுவனமாக எமது நிறுவனம் பெற்றுள்ள நன்மதிப்பை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது” என தெரிவித்தார்.

இந்த சிறந்த முகாமையாளர்களுக்கான விருது வழங்கும் நிறுவனத்தின் நோக்கம், தலைமைத்துவத்தின் திறனை மதிப்பிடுவதற்கான முறைகள் மற்றும் முகாமைத்துவ பாணி, செயற்படுத்துதல் மற்றும் நேர்மைத்தன்மை போன்றவற்றை அளவீடு செய்வதன் மூலம் இலங்கையில் சிறந்த முகாமையாளர்களை உருவாக்கக் கூடிய சூழல் கட்டமைப்பையும் கலாச்சாரத்தையும் கட்டியெழுப்புவதற்கான வரையறை ஆகும். இந்த பரிந்துரைக்கப்பட்ட முகாமையாளர்களை மதிப்பீடு செய்வது சர்வதேச தரம் மற்றும் திறன் மாதிரி அடிப்படையிலான பிரதான முகாமைத்துவ அளவீடுகளின் விளைவாக துறையில் நிபுணர்களுடன் மேற்கொண்ட நேர்காணல் மூலம் ஆகும்.

எயார்டெல்லின் தனித்துவமான சேவைக் காலாசாரம் அதன் பெறுமதிகள் மதிப்புகளில் வேரூன்றியுள்ளது. நிறுவனம் பாவனையாளர்களின் மற்றும் ஊழியர்களின் தேவைகளை புரிந்து கொள்வதற்கு எப்போதும் முயற்சி செய்வதுடன் அங்குள்ள பல்வேறு பிரிவுகளிலுள்ள ஊழியர்கள் நிறுவனத்திற்குள் உள்ளவர்களின் கலாசார பின்னணிகளை ஏற்றுக் கொண்டு எப்போதும் அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் செயற்படுகின்றது.

சிறந்த முகாமைத்துவத்தை மேம்படுத்துவதை நோக்காக் கொண்டு விசேடமாக கவனம் செலுத்தும் வகையில் ‘Lead Right’ போன்ற முன்னணி வேலை திட்டங்கள் உள்ளிட்ட, நிறுவனத்தின் அனைத்து மட்டத்திலுமுள்ள ஊழியர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கும் எயார்டெல் குழுவின் மற்றுமொரு தீர்மானம் மிக்க அங்கமாகும்.

சிறந்த முகாமையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது துறையிலுள்ள சிறந்த முகாமையாளர்களை நிறுவனம் அடையாளம் காணுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பளிப்பதற்காக நடத்தப்படும் விருது வழங்கும் நிகழ்வாக இருப்பதுடன் தலைமைத்துவ சிறப்பை மதிப்பீடு செய்வதற்காக Colombo Leadership Academyஇனால் வருடாந்தம் நடத்தப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களுடன் கூடிய கலாச்சாரத்திற்குள் அடுத்த தலைமுறைக்கான தலைவர்களை உருவாக்குயில் நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றுக்காக 'விசேட முகாமையாளர்களைக் கொண்ட நிறுவனம்' எனும் விருதிற்கு நிறுவனம் தகுதி பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X