S.Sekar / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எயார்டெல் லங்கா தற்போது நாடு முழுவதிலுமுள்ள தமது வாடிக்கையாளர் பிரிவு வலையமைப்பை மேலும் விஸ்தரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விஸ்தரிப்பானது அண்மையில் நாடு முழுவதிலும் 4G தொழில்நுட்பத்தை முழுமையாக நிர்வகிக்கும் விதத்தில் வழங்கவுள்ள எயார்டெல்லின் நடவடிக்கைக்கு சமமாக அமையும்.
இந்த விஸ்தரிப்போடு எயார்டெல்லிடம் தற்போது நாடு முழுவதிலும் 5000 சேவை பிரிவுகள் மற்றும் 70 லங்கா பெல் விற்பனை நிலையங்கள் உள்ளன. அதன்படி புதிய கையடக்க தொலைபேசி இணைப்புக்களை பெற்றுக்கொள்ளுதல், ரீலோட் செய்தல் / கட்டணங்களை செலுத்தும் வசதிகள், சிம் கார்ட் Update செய்தல் மற்றும் மேலும் பல சேவைகளை இந்த நிலையங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எயார்டெல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான, அஷீஷ் சந்திரா, “நாம் எமது கையடக்க தொலைத்தொடர்பு வலைப்பின்னலை எப்பொழுதும் மேம்படுத்துவதோடு அந்த செயற்பாடுகளுடன் ஒப்பிட முடியாத வாடிக்கையாளர் அனுபவத்தையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம். இந்த உறுதியான பயணத்தின் மூலம் எமக்கு தேவைப்படுவது எதிர்காலத்தில் நாம் அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ள சர்வதேச மட்டத்திலான 4G வலைப்பின்னல் அனுபவத்திற்கு நெருங்குவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாகும். இந்த விஸ்தரிப்புக்காக நாடு முழுவதிலும் நாம் மேற்கொண்ட முதலீடுகள் தற்போதுள்ள மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்காக எமது நிரந்தரமான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது என நான் நம்புகின்றேன், அத்துடன் ஏனைய போட்டியாளர்களையும் விட சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களுக்கு முக்கியத்துவத்தை பெற்றுக் கொடுக்கவும் நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.” என தெரிவித்தார்.
வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக நிறுவனம் மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு அங்கமாக எயார்டெல் அண்மையில் Google’s Business Messages சேவையுடன் வெற்றிகரமாக ஒன்றிணைந்து இலங்கையில் முன்னணி கையடக்க தொலைதொடர்பாளராக மாறியுள்ளது. இந்த சேவையுடன் இணைந்ததுடன் எயார்டெல்லின் ஒத்துழைப்பு அல்லது தகவல்களை தேடும் எவருக்கும் Google Maps மற்றும் Google Searchக்கு இலகுவாக பிரவேசிக்க முடியும். மேலும் எயார்டெல் பாவனையாளர்களுக்கு மெசேஞ்ஜர், வைபர், டெலிகிராம், ட்டுவிடர், வட்ஸ்-அப் மற்றும் எயார்டெல் இணையத்தளம் ஆகிய அனைத்து பிரதான டிஜிட்டல் தளங்களின் ஊடாக எயார்டெல்லின் அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்களுடன் இலகுவாக தொடர்புகொள்ளவும் முடியும். அனைத்து ஊடக வலைப்பின்னல்களுக்காக வாடிக்கையாளர் சேவைகளை அறிமுகம் செய்ய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
5 hours ago
27 Jan 2026