S.Sekar / 2021 மார்ச் 01 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிசம்பர் மாதம் 2019 மற்றும் 2021 பாதீட்டில் அறிவிக்கப்பட்ட பெருவாரியான வரிகள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக திறைசேரி அறிவித்தது. வியாபாரங்களக்கு அடுத்த வரியாண்டுக்கு தெளிவான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல தெரிவித்தார்.
ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் அறிவிக்கப்பட்ட வரி முறைகளில் மாற்றங்கள் மற்றும் அண்மையில் வெளியிடப்பட்ட பாதீட்டில் குறிப்பிடப்பட்ட வரித் திருத்தங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சு செயலாற்றுவதாக அவர் மேலும் கூறினார். இதில், வருமான வரி மற்றும் நிறுவனசார் வரிகளில் மாற்றம் மற்றும் 2021 ஆம் ஆண்டுக்காக பிரேரிக்கப்பட்ட புதிய பொருட்கள் மற்றும் சேவைகள் வரி ஆகியனவும் அடங்கியிருப்பதாக தெரிவித்தார்.
நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டின் போது முன்மொழியப்பட்டிருந்த இலங்கைக்கு கொண்டு வரப்படும் வெளிப்படுத்தப்படாத அந்நியச் செலாவணியின் மீது 1 சதவீத வரி அறவிடுவது எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது.
தொழில் முயற்சியாளர்களுக்கு அவ்வாறான நிதியை இலங்கைக்கு முதலீடாக கொண்டு வரும் போது இவ்வாறான 1 சதவீத வரி மாத்திரம் அறவிடப்படும் என குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தினூடாக பணச் சலவை மோசடி இடம்பெறுவதற்கு அதிகளவு வாய்ப்புகள் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
”அமைச்சரவையினால் இந்த சகல ஏற்பாடுகளுக்கும் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதுடன், ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும் எனக் கருதுகின்றோம். எனவே நிறுவனங்களுக்கு தமது தொழிற்பாட்டு சூழல் தொடர்பில் தெளிவான சிந்தனையைக் கொண்டிருக்கக்கூடியதாக இருக்கும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, ஐந்தாண்டுகளுக்காக தொடர்ச்சியான கொள்கைத் திட்டத்தை வெளியிட்டிருந்ததுடன், இதனையை நாம் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.” என ஆடிகல மேலும் குறிப்பிட்டார்.
2021 ஆம் ஆண்டில் பொது மக்களிடமிருந்தான வருமானத்தில் 450 பில்லியன் ரூபாய் வருமான வீழ்ச்சி நிலவுகின்றது எனும் குற்றச்சாட்டை இவர் மறுத்திருந்ததுடன், 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அரசாங்கம் 65 பில்லியன் ரூபாயை வருமானமாக திரட்டியிருந்ததாகவும், இது ஒரு வருடத்துக்கு முன்னரான காலப்பகுதியில் பதிவாகியிருந்த 61 பில்லியன் ரூபாயை விட அதிகமான தொகை எனவும் குறிப்பிட்டார்.
திறைசேரி செயலாளர் மேலும் குறிப்பிடுகையில், “அண்மைய திறைசேரி வருமதிகள் மீண்டெழும் பொருளாதாரத்தை பிரதிபலிப்பதுடன், இரண்டாம் அரையாண்டில் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தன. குறிப்பாக வக்சீன்கள் வழங்கல் ஆரம்பித்துள்ளதுடன் மற்றும் சுற்றலாத் துறை மீள இயங்க ஆரம்பித்துள்ளமையினூடாக எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சியை எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
45 minute ago
48 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
48 minute ago
58 minute ago
1 hours ago