Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 21 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளாசிக் ட்ராவல் நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமான Expo Rail அண்மையில் தனது 5ஆம் ஆண்டு வருட பூர்த்தியைக் கொண்டாடியிருந்தது. 5 ஆண்டுகள் எனும் குறுகிய காலப்பகுதியில், Expo Rail இனால், இலங்கையின் புகையிரதப் பயணத்தில் புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்களை அடிப்படையாகக்கொண்ட முறையினால் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2011இல் ஸ்தாபிக்கப்பட்டது முதல், Expo Rail இனால் இதுவரையில் 250,000க்கும் அதிகமான பயணிகளுக்கு இலங்கையின் வெவ்வேறு பகுதிகளுக்கு சொகுசான புகையிரததில் பயணிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Expo Rail சேவை இரு பகுதிகளுக்கு தற்போது வழங்கப்படுகின்றன. கண்டி மற்றும் பதுளை ஆகிய பகுதிகளுக்குப் பயணிக்கும் புகையிரதங்களில் இந்த Expo Rail பெட்டி இணைக்கப்பட்டுள்ளன.
நாவலப்பிட்டி, ஹட்டன், ஹப்புத்தளை, எல்ல, குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த முக்கிய நிகழ்வை குறிக்கும் வகையில், Expo Rail ஊழியர்கள் மற்றும் கிளாசிக் ட்ராவல் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்களின் பிரசன்னத்தில் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் கிளாசிக் ட்ராவல் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேஷ் மென்டிஸ், க்ளாசிக் ட்ராவல் முகாமைத்துவப் பணிப்பாளர் சயிஃவ் யூசுஃவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
19 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago
4 hours ago