2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

கசகஸ்தானிலிருந்தும் வருவர்

S.Sekar   / 2021 பெப்ரவரி 06 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கசகஸ்தானிலிருந்து வாரமொன்றுக்கு 350 சுற்றுலாப் பயணிகள் வீதம் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எயிட்கன் ஸ்பென்ஸ் ட்ராவல்ஸ் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் வரையில், வாராந்தம் இரு விசேட விமான சேவைகளினூடாக இந்த சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனூடாக நாட்டின் சுற்றுலாத் துறைக்கு பங்களிப்பு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்காக தாம் TUI கசகஸ்தானுடன் கைகோர்த்துள்ளதாகவும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சுகாதாரத் தரப்பினரால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உயிரியல் – குமிழ் (bio-bubble) விதிமுறைகளின் பிரகாரம் இவர்கள் அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எயார் அஸ்டானா மற்றும் SCAT எயார்லைன்ஸ் போன்ற விமான சேவைகளினூடாக இந்த சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்படவுள்ளனர். இந்தத் திட்டத்தின் வெற்றிகரத் தன்மையை பொறுத்து, எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் பாரியளவிலான திட்டத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக எயிட்கன் ஸ்பென்ஸ் ட்ராவல்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் நளின் ஜயசுந்தர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X