Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் IELTS பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு கணினியில் தோற்றும் வசதியை தாம் ஏற்படுத்தியுள்ளதாக, பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் பிரிட்டிஷ் கவுன்சில் ஊடாக சர்வதேச ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட விசேட ஆங்கிலப் பரீட்சையான IELTSக்கு பதிவு செய்து, கணினியில் இந்த IELTS பரீட்சைக்கு தோற்ற முடியும் என பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சிலில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, இந்த விசேட பரீட்சைக்கு முகங்கொடுக்கும் அனுபவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கும், விருந்தினர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
கணினி மூல பரீட்சை முறையின் மூலம் வாரமொன்றில் அதிகளவு பரீட்சை அமர்வுகள் வழங்கப்படுகின்றன. இதனூடாக பரீட்சார்த்திகளுக்கு தமது பரீட்சை தினத்தை நிர்ணயிக்கும் போது, நிலையான திகதியை கொண்டிருக்கும் கடதாசி அடிப்படையிலான முறையுடன் ஒப்பிடுகையில் அதிகளவு சௌகரியத்தை பெற்றுக் கொள்ள முடியும். மாற்று முறைப்படி பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள பரீட்சார்த்திகளுக்கு 13 தினங்கள் காத்திருக்க வேண்டியிருந்த நிலையில், புதிய கணினி முறைப்படி பெறுபேறுகளை 5 தினங்களுக்குள் பெற்றுக் கொள்ள முடியும்.
பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கைக்கான பணிப்பாளர் ஜில் கெல்டிகொட் கருத்துத் தெரிவிக்கையில், “நாம் IELTS பரீட்சைக்கு தோற்றும் முறை மற்றும் அனுபவத்தை தொடர்ச்சியாக மேம்படுத்துவதில் எம்மை அர்ப்பணித்துள்ளோம். கணினியில் IELTS பரீட்சைக்கு தோற்றுவது என்பது, பல வழிகளில் அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும் என்பதுடன், பரீட்சார்த்திகளுக்கு அதிகளவு நெகிழ்ச்சித்தன்மை மற்றும் சௌகரியத்தையும் சேர்க்கும்” என்றார்.
புதிய கணினி முறையில், பரீட்சார்த்திகளுக்கு செவிமடுத்தல், வாசித்தல், எழுத்து மூலத் தேர்வுகளுக்கு கணினியில் தோற்றலாம். பேச்சுத் தேர்வு வழமை போன்று நேரடியானதாக அமைந்திருக்கும்.
முதல் மூன்று பிரிவுகளும் ஒரே நாளில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன், பேச்சுத் தேர்வை ஏனைய தேர்வுகளுக்கு முகங்கொடுப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அல்லது முகங் கொடுத்ததற்கு ஒரு வாரத்துக்குள் தோற்றலாம். எந்த முறையைத் தெரிவு செய்தாலும் பரீட்சை உள்ளடக்கம், புள்ளி வழங்கல், காலம், கடினத்தன்மை போன்றன ஒரே மாதிரியானதாக அமைந்திருக்கும்.
12 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago