2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கண்டி நகரம் ஸ்மார்ட் ஆகிறது

Gavitha   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் நகராக மெருகேற்றம் செய்வதற்கு கண்டி தெரிவு செய்யப்பட்டுள்ளது என நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள றவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

'இந்தியாவை பொறுத்தமட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பல ஸ்மார்ட் நகரங்களை நிறுவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதற்கமைய 100 ஸ்மார்ட் நகரங்களை நிறுவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன' என குறிப்பிட்டுள்ளார்.

'பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கண்டி வடக்கு நீர் விநியோக திட்டத்தை முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக கண்டி மாவட்டத்தில் நீர் விநியோகத்தை மேற்கொள்வதற்காக 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் நகரம் என்பதற்கு ஒற்றை வரைவிலக்கணம் ஏதுமில்லாத நிலையில், ஸ்மார்ட் நகரங்களை நிறுவுவதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது, தகவல் தொழில்நுட்பத்தினூடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை  முன்னெடுப்பது போன்றன அமைந்திருக்கும்' என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதான உட்கட்டமைப்பு பிரிவுகளில் ஸ்மார்ட் நகரத்தில் போதியளவு நீர் விநியோகம், தடைகளற்ற மின் விநியோகம், முறையான கழிவறை வசதிகள், திண்மக் கழிவு முகாமைத்துவ வசதிகள், வினைத்திறன் வாய்ந்த போக்குவரத்து வசதிகள், சகாயமான வீடுகள், சிறந்த மேலாண்மை, சுகாதாரம் மற்றும் கல்வி, நிலைபேறான சூழல் மற்றும் குடிமக்களுக்கான பாதுகாப்பு போன்றன உள்ளடங்கியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X