Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 05 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்து சமுத்திரம் மற்றும் ஆசியப் பிராந்தியங்களுக்கான தனது எதிர்கால கப்பல் சரக்கு கையாள்கைக்கான கேந்திரநிலையமாக இலங்கை விளங்கும் என்று, சுவிஸ் நாட்டைத் தளமாகக் கொண்டியங்கும் சரக்கு மற்றும் தளபாடப் போக்குவரத்துத் தீர்வு வழங்குநரான M&M Militzer &Munch குழுமம் அறிவித்துள்ளது.
“இலங்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கின்றது. கொழும்புத் துறைமுகத்தின் சரக்குக் கையாள்கை விரிவடையச் செய்யப்பட்டமையானது, கொழும்புத் துறைமுகத்தின் கொள்கலன் கையாளுகைத் திறனானது அதிகரிக்கப்பட்டமையானது, கப்பற்போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியை பறைசாற்றுகின்றது. கப்பல் போக்குவரத்தைக் கருத்திற்கொள்கையில், சிறந்த முறையில் இணைக்கப்பட்ட நாடு என்ற நிலையை இலங்கை தெற்காசியாவில் பெற்றுள்ளது. இந்தியாவையும் விஞ்சி, ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மாநாடு (UNCTAD) வெளியிட்ட ‘Liner Shipping Connectivity Index 2017’ எனும் சஞ்சிகையில் உலகில் 15 ஆவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இலங்கையை முற்றுமுழுதான கடற்படை மற்றும் வர்த்தக கப்பற்போக்குவரத்துக் கேந்திர நிலையமாக மாற்றுவது என்ற அரசாங்கத்தின் இலக்கை மீள நிலைநிறுத்தும் முகமாக, M&M ஆனது, தனது சரக்குக் கையாள்கை நடவடிக்கைகளை இலங்கையில் ஸ்திரப்படுத்துவதாக அறிவித்துள்ளது” என்று M&M Militzer &Munch (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர், டிலும் ஸ்டெம்போ M&M Militzer & Munch இன் கொழும்பு அறிமுக நிகழ்வில் கூறினார்
நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ள, M&M Militzer & Munch குழுமப் பிரதிநிதி, திருமதி தாட்டியான ஷேபர் நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொள்வதற்காக ஐரோப்பாவிலிருந்து வருகை தந்திருந்தார்.
“இலங்கை அரசாங்கமானது பொதுவாகப் போக்குவரத்துத் துறையையும் குறிப்பாகக் கப்பல் போக்குவரத்துத்துறையை முன்னேற்றுவதிலும் நிலைபேண்தகு முயற்சிகள் பலவற்றை எடுத்துள்ளது. இலங்கைத் துறைமுக அதிகாரசபை சட்டம் மற்றும் வணிக கப்பற் சட்டம் என்பவற்றைத் தற்கால ஏற்பாட்டியல் மற்றும் கப்பற்போக்குவரத்துத் தேவைகளுக்கேற்ற விதத்தில் மறுசீரமைப்பதற்கு 2018 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்ட உரையில் கொடுக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கடற்போக்குவரத்து சமூகம் வெகுவாகப் பாராட்டியுள்ளது.
M&M இன் நிறுவனமானது, உலகின் எட்டு நேர வலையங்களை இணைத்து, கிழக்கு சீனாவின் ஜியுவிலிருந்து ஸ்பெய்னின் மட்ரிட் வரை 13,000 கிலோ மீற்றர்வரை நீண்ட ரயில் பாதையைக் கொண்டிருக்கின்றது.
1880 ஆம் ஆண்டில் ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட Militzer &Munch ஆனது இன்று சுவிட்சர்லாந்தைத் தளமாகக் கொண்ட TransInvest குழுமத்தின் ஓரங்கமாகும். Militzer &Munch ஆனது 25 நாடுகளில் 100 இடங்களில் செயற்படுகின்றது.
வான், கடல், தரை மற்றும் ரயில் வழியான பயணங்கள் மேற்கு, கிழக்கு ஐரோப்பிய, பொதுநலவாய நாடுகள், மத்திய கிழக்கு, தூர கிழக்கு மற்றும் மெஹரப் போன்ற அடர்த்தியான கிளை வலையமைப்புகளினூடான திட்டப் போக்குவரத்துகள் என்பனவற்றை வழங்குகின்றன. எங்கள் கூட்டாண்மைப் பெறுமானங்கள் வலிமையான தூண்களைப் போன்றவை. எங்கள் அன்றாட வேலைகளுக்கு ஆதரவளிப்பவை. எங்கள் கூட்டாண்மைக் கொள்கையானது உயர் பொறுப்புமிக்கதெனும் அடிப்படையில், எங்கள் சக உயிர் வாழ்வோருக்காகவும் எங்கள் சுற்றாடலுக்காகவும் நாங்கள் கொண்டுசெல்லும் பொருட்களுக்காகவும் இந்தக் கூட்டாண்மைக் கொள்கைக் கடைப்பிடிக்கின்றோம் என்றும் லோதர் தோமா தெரிவித்தார்.
21 minute ago
43 minute ago
54 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
43 minute ago
54 minute ago
58 minute ago