Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 07 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில் முயற்சியாளர்கள், சமூகத்தின் வியாபார முயற்சிகளின் முழுமையான வளர்ச்சி வாய்ப்புகளை அடையப்பெற உதவும் வகையில், காகில்ஸ் வங்கியின் வியாபார வங்கிச்சேவைப் பிரிவு மிகச் சிறந்த மற்றும் தனித்துவமான நிதியியல் தீர்வுகளை அவர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.
தொழிற்படு மூலதனத்தை நிர்வகிப்பது முதற்கொண்டு, வர்த்தக விரிவாக்க முயற்சிகளுக்கு உதவுதல், வியாபார முயற்சிகளுக்கு வலுவூட்டுதல், இலாப மட்டங்களை அதிகரித்தல் மற்றும் நாடு கடந்த வியாபார வாய்ப்புகளைத் தோற்றுவித்தல் என, இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி மீது, அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை வியாபார வங்கிச்சேவைப் பிரிவு கொண்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரத் தொழிற்துறையானது மூலோபாயம் மிக்க ஒரு துறையாக இனங்காணப்பட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தியில் முக்கிய அங்கம் வகித்து வருகின்றது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் காலத்துக்குக் காலம் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளை வழங்கி வருகின்ற போதிலும், உற்பத்தி மற்றும் சந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் ஒரு முட்டுக்கட்டையாகவே காணப்படுகின்றன.
காகில்ஸ் வங்கியின் வியாபார வங்கிச்சேவைப் பிரிவின் தலைமை அதிகாரியான ஷார்மல் ஃபேர்டினாண்டோ கூறுகையில், “2014 ஆம் ஆண்டு நாம் தொழிற்பட ஆரம்பித்த காலம் முதற்கொண்டு, சிறிய மற்றும் நடுத்தர வியாபாரத்துறைக்கு ஆதரவளிப்பது, நாம் முன்னுரிமையளிக்கின்ற விடயங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. இத்துறையின் வளர்ச்சி வாய்ப்புகளை இனங்கண்டுள்ள நிலையில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரத் துறையின் வளர்ச்சிக்கு, ஆதரவளிக்கும் பல்வேறு முக்கிய முன்னெடுப்புகளை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம். ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான கொடுப்பனவுகளை இணையத்தின் மூலமாகவும், எமது கிளைகளிலும் செலுத்துவதற்கு இடமளிக்கும் வகையில், நாம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள முன்னெடுப்பு, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரத் துறையை இலக்காகக் கொண்ட டிஜிட்டல் ரீதியான முன்னெடுப்புகளில் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரத் துறையானது பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பாற்றும் அதேசமயம், தொழில்வாய்ப்புகளைத் தோற்றுவிக்கும் ஓர் அத்தியாவசியமான மூலமாக அமைவதால், நாட்டின் பொருளாதாரத்தில் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகின்றது. ‘மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வங்கி’ என்ற நிறுவனத்தின் மகுட வாக்கியத்துக்கு அமைவாக, தொழில் முயற்சி ஆற்றல்களை வளர்க்கின்ற, புத்தாக்கமான நிதியியல் தீர்வுகளை வழங்கி, அந்த வளர்ச்சியில் பங்காளராக இணைந்துகொள்வதற்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
22 minute ago
44 minute ago
55 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
44 minute ago
55 minute ago
59 minute ago