Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 29 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, தனது புதிய கிளையை, இல. 27, மஹா வீதி, கிரிஉல்ல எனும் முகவரியில் அண்மையில் திறந்திருந்தது.செலான் வங்கியின் உயர் முகாமைத்துவ அணியினர், வாடிக்கையாளர்கள் மற்றும் இதர விருந்தினர்கள் இந்தப் புதிய கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புதிய கிரிஉல்ல கிளை, வார நாட்களில் மு.ப. 9.00 முதல் பி.ப. 4.00 மணி வரை திறந்திருக்கும். கிரிஉல்ல நகரை அண்மித்து வசிக்கும் செலான் வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போது இந்த கிளைக்கு விஜயம் செய்து, தமது வங்கியியல் மற்றும் நிதியியல் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
30 வருட காலமாக வங்கிச் சேவைகளை அன்புடன் அரவணைத்து வழங்கி வரும் செலான் வங்கி, வாடிக்கையாளருக்கு மிகவும் அண்மித்த நிலைக்கு வங்கியை கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது.
தனது கிளை வலையமைப்பை நாடு முழுவதிலும் விஸ்தரித்து வருவதுடன், 25 மாவட்டங்களில் தனது பிரசன்னத்தை உறுதி செய்துள்ளது.
‘தொடர்ச்சியான மேம்பாடு’ என்பது நிறுவனத்தின் பெறுமதிகளில் ஒன்றாக அமைந்துள்ளதுடன், நவீன தொழில்நுட்பத்தினூடாக சிறந்த மற்றும் மிருதுவான வங்கியியல் அனுபவத்தை வழங்கி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
38 minute ago
2 hours ago