Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் மாணிக்கக் கல் தொழிலில் ஈடுபட்டுள்ள கஹவத்த குருகே மெனிக் தனியார் நிறுவனம் மாணிக்கக் கற்கள், ஆபரணங்கள் அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் இரட்டை ஜனாதிபதி விருதுகளை வென்றுள்ளது.
மாணிக்கக் கல் சுரங்க அகழ்வில் அதிக உரிமப்பத்திரதாரிக்கான வெண்கல பதக்க விருதையும் சுரங்க அகழ்வு நிபுணருக்கான சிறப்புத் தேர்ச்சி விருதையும் குருகே மெனிக் நிறுவனம் வென்றுள்ளது.
குருகே மெனிக் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கயான் குருகேவினால் மேற்படி விருதுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. விருது வழங்கும் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு Shangri la ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
குருகே மெனிக் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜினதாச குருகேவினால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட குருகே மெனிக் நிறுவனம், பல தசாப்த காலங்களாக இயங்குகிறது. உள்நாட்டில் மாணிக்கக் கல் வர்த்தகத்தில் ஈடுபடுவதோடு வெளிநாடுகளுக்கு மாணிக்கக் கற்களை ஏற்றுமதி செய்கிறது.
பாங்கொக், ஹொங் கொங், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மாணிக்கக் கற்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நீல மாணிக்கம், புஸ்பராகம், வைடூரியம், பசிங்கல், ஆறுநூல் போன்ற மாணிக்கக் கல் வகைகள் இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .