Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 20 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
LAUGFS Super markets தனது வியாபார நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் வகையில், கெஸ்பாவ நகரிலும் தனது விற்பனை நிலையத்தைத் திறந்துள்ளது.
நிறுவனத்தின் வேகமான விஸ்தரிப்பு மூலோபாயத்துக்கு அமைவாக, LAUGFS Super markets சில்லறை வியாபாரச் சங்கிலியில் 34 ஆவது இணைப்பாக, இந்த வியாபார மய்யம் மாறியுள்ளது.
LAUGFS Super பிரதான வர்த்தக நாமத்தின் கீழ், மிகவும் பாரிய வியாபார மய்யமாக அமையப்பெற்றுள்ள இது, வாடிக்கையாளர்களின் பல்வேறுபட்ட தேவைகளைத் தொடர்ந்தும் நிறைவேற்றும் வகையில் நீடித்து உழைக்கும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் அடங்கிய புதிய உற்பத்தி வரிசையையும் உள்ளடக்கியுள்ளது.
இல. 107, ஹொறண வீதி, கெஸ்பாவ, பிலியந்தல என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த வியாபார மையம், LAUGFS பணிப்பாளர் சபைத் தலைவர் டபிள்யூ.கே.எச். வெகஹாபிட்டிய மற்றும் LAUGFS குழும முகாமைத்துவப் பணிப்பாளர் திலக் டி சில்வா ஆகியோரால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வியாபார மய்யத்தைத் திறந்து வைத்துள்ளமை தொடர்பில் LAUGFS Supermarkets பிரதம நிறைவேற்று அதிகாரியான முராட் ரஹிம்தீன் கூறுகையில், “மிகப் பாரிய சுப்பர்மார்க்கெட்டாக அமைந்துள்ள, வியாபார மய்யத்தைக் கெஸ்பாவ நகரில் திறந்து வைப்பதையிட்டு மிகவும் பெருமை கொள்வதுடன், சமையலறைச் சாதனங்கள், சமையல் பாத்திரங்கள், கண்ணாடிப் பாத்திரங்கள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், துணி வகை உற்பத்திகள், இலத்திரனியல் பொருட்கள் என நீடித்து உழைக்கும் பல்வேறு வீட்டுப் பாவனைப் பொருட்களுடன் ஒரே இடத்திலேயே அனைத்துப் பொருட்களையும் கொள்வனவு செய்யும் வகையில் எமது உற்பத்திகளையும், பொருட்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றோம். விசுவாசம் மிக்க வர்த்தகநாமம் என்ற வகையில், மகத்தான தெரிவு, நியாயமான விலைகள், தர உத்தரவாதம் மற்றும் இன்முகத்துடனான வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை வழங்கி, அவர்களின் பலதரப்பட்ட தேவைகளை LAUGFS Super எப்போதும் ஈடுசெய்து வருகின்றது” என்று குறிப்பிட்டார்.
வருடத்தில் 365 தினங்களும் மு.ப 7 மணி முதல் முன்இரவு 11 மணி வரையும் திறந்திருப்பதுடன், அன்றாட அத்தியாவசியப் பொருட்கள், புத்தம்புதிய பழ வகை, மரக்கறி வகை, உறைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், நீடித்து உழைக்கும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என எண்ணற்ற பொருட்களைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளனர்.
8 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jul 2025