Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 21 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாலந்தா கல்லூரியின் கனிஷ்ட பழைய மாணவர் சங்கத்தினால் தொடர்ச்சியாக 12ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Future Minds 2017’ கண்காட்சிக்கு தொடர்ந்தும் அனுசரணை வழங்க கொமர்ஷல் கிரெடிட் முன்வந்துள்ளது. ‘எந்தவொரு நபரும் கைவிடப்பட்டவர்கள் இல்லை’ என மிகப் பொருத்தமான தொனிப்பொருளில் அமைந்த இந்த உயர் கல்வி மற்றும் தொழில் கண்காட்சி வருடந்தோறும் பிரதான மூன்று நகரங்களில் இடம்பெறுகின்றது. உயர் கல்வி ஒன்றை அடைந்து கொள்ளும் விடயத்தில் உலகளாவிய தற்கால போக்குகளை பின்தொடர்ந்து செல்ல விரும்புகின்ற பெருமளவிலான மாணவர்களை இலக்காகக் கொண்டு இது நடாத்தப்படுகின்றது.
‘Future Minds 2017’ கண்காட்சி ஜூன் 16ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை கொழும்பு BMICHஇல் மிகவும் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றதுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த காட்சிக்கூடங்கள் மற்றும் தகவல் மையங்கள் இந்நிகழ்வுக்கு வருகை தந்த பல்லாயிரக்கணக்கானோரால் பார்வையிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கண்டி KCC இல் ஜூன் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் கண்காட்சி இடம்பெற்ற வேளையிலும் இந்நிகழ்வு வழமைபோன்று பெருமளவிலான பார்வையாளர்களை தம்பக்கம் கவர்ந்திழுத்திருந்தது. அதன்பின்னர், எதிர்வரும் செப்டெம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் காலி நகர மண்டபத்தில் இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago