2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் மகளிர் தின நிகழ்வில் பெண் ஊழியர்கள்

Freelancer   / 2024 மார்ச் 29 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் முயற்சிகளில் ஒன்றாக, நாடு முழுவதிலும் உள்ள கொமர்ஷல் வங்கிக் கிளைகளில் பணி புரியும் பெண் ஊழியர்களை உள்ளடக்கிய “Counting HER in, and Investing in HER”. எனும் தலைப்பில் ஒரு சிறப்பு அறிவு பகிர்வு அமர்வினை நடத்தியது.

வங்கியின் மகளிர் வங்கிப் பிரிவு மற்றும் வங்கியின் ஊழியர்கள் அபிவிருத்தி நிலையம் (SDC) ஏற்பாடு செய்த இந்த நிகழ்வானது, பெண் ஊழியர்களிடையே உள்ளடங்கிய தன்மையை மேம்படுத்துதல், திறனை மேம்படுத்துதல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அமைந்ததாக வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வானது, நேரடியாகவும் மற்றும் மெய்நிகர் ரீதியாகவும் என கலப்பின வடிவில், வங்கியின் கேட்போர் கூடத்தில் ஒரு அமர்வை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. மேலும் MS குழுக்கள் மூலம் மெய்நிகர் அணுகலானது, நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பங்கேற்பை உறுதி செய்தது.

இந்நிகழ்வில் உரையாற்றிய கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க, பாலினம் பாராமல் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான வங்கியின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியதுடன், அனைத்து ஊழியர்களும் வெற்றிபெறக்கூடிய ஆதரவான மற்றும் உள்ளடக்கிய சூழலை வளர்ப்பதற்கு வங்கியானது அர்ப்பணிப்பான சேவையை வழங்கும் எனவும் உறுதியளித்தார். பெண் ஊழியர்களின் திறனை அங்கீகரித்து முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் வங்கியின் வெற்றிக்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்த மனதுங்க, வங்கி ஏற்கனவே பெண் ஊழியர்களின் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருவதாகவும், இந்த வேலைத்திட்டம் அவர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கத்தை கொண்டதாகவும் கூறினார்.

AIA இன்சூரன்ஸ் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி/நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி. சதுரி முனவீர, JAT ஹோல்டிங்ஸின் நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளர் திருமதி. அனிகா வில்லியம்சன் மற்றும் Terapy Ayurvedic Tea நிறுவன ஸ்தாபகரும் பணிப்பாளருமான திருமதி. ருவினிகா ரணசிங்க உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குழுவில் இடம்பெற்றமை மதிப்புமிக்க தருணத்தை வழங்கியது. இவர்கள் அனைவரும் பெருநிறுவனத்துறையில் பெண்கள் ஆளுமை மற்றும் அதிகாரத்துடன் திகழும் வகையில் தலைமைத்துவ பங்கினை வகித்து வருகின்றனர்.

நிகழ்வின் தலைப்புகள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளல், தாம் தெரிவு செய்த துறைகளில் தொழில்முறை நெறிமுறைகள் மற்றும் வலையமைப்பு மூலம் எவ்வாறு வெற்றி பெறுவது, தொழில் புரியும் பெண்களாகவும் தாய்மாராகவும் பணியிடங்களிலும் வீட்டிலும் எவ்வாறு சமநிலையை பேணுவது, உறுதியான மற்றும் இலக்கு சார்ந்ததாக இருக்க வேண்டியதன் அவசியம், தொழில்முறை தகுதிகளின் முக்கியத்துவம், ஏனைய தொழில்களை புரியும் பெண்களுக்கு எவ்வாறு முன்மாதிரியாக திகழ வேண்டும் போன்றவற்றை உள்ளடக்கியதாகஅமைந்திருந்தது.

இந்நிகழ்வானது கேள்வி, பதில் அமர்வு மற்றும் சிற்றுண்டிகளுடன் நிறைவு பெற்றது. மேலும் இதில் பங்குபற்றியவர்களுக்கு இந்நிகழ்வானது தமக்கிடையே இணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளவும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக உணர்வை உருவாக்கவும், பெண் ஊழியர்களிடையே ஆதரவை ஏற்படுத்தவும் வாய்ப்பினை வழங்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X