Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 21 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி, அதன் டிஜிட்டல் வங்கித்துறை கட்டமைப்பான கொம்பேங்க் டிஜிட்டல் சேவையில் ஒரு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் என்ற இலக்கை எய்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
சகலவிதமான இணையவழி மற்றும் நடமாடும் வங்கிச் சேவைகளையும் பிரத்தியேகமான கட்டமைப்பில் ஒருங்கிணைத்துள்ள கொம்பேங்க் டிஜிட்டல், மிகவும் பொறுப்புவாய்ந்த இணைய பிரயோகங்கள், மூன்று நடமாடும் பிரயோகங்கள் (IOS> அன்ட்ரோயிட் மற்றும் ஹுவாவி) மூலமாக டெஸ்க்டொப் கணினிகள், லெப்டொப் கணனிகள், டெப்லட்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் என எல்லா கருவிகள் ஊடாகவும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
'இந்த தங்குதடையற்ற பரிமாற்றங்கள் மூலம் எமது வாடிக்கையாளர்கள் பலர் டிஜிட்டல் வங்கிச் சேவைகளை அடைந்து கொள்வதால் நாம் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளோம்' என்று கொமர்ஷல் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி எஸ். பிரபாகர் கூறினார். 'டிஜிட்டல் வங்கிச் சேவையை பாதுகாப்பானதாகவும் விரிவானதாகவும், நம்பத் தகுந்ததாகவும், பாவனைக்கு இலகுவானதாகவும் ஆக்குவதற்கு வங்கி கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. தொழில்நுட்பம் புத்தாக்க ஊக்குவிப்பு என்பனவற்றை இலங்கை போன்ற ஒரு சந்தையில் காணக்கிடைத்துள்ளமை பற்றியும் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். காரணம் இணையவழியுடனான பரிச்சயம் மொபைல் வங்கிச் சேவை என்பன இங்கு இன்னமும் சமமற்ற நிலையிலேயே இருக்கின்றன' என்று அவர் மேலும் கூறினார்.
'மேம்படுத்தல்கள் பற்றிய வியப்பூட்டும் வரைபுகள் எம்மிடம் உள்ளன. மிக அண்மைய காலத்துக்குரிய பண்புகள் மேம்படுத்தல் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது சில்லறை, நுண் மற்றும் நடுத்தர, கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான அனுபவங்களை வழங்கக் கூடிய சேவைகளும் உள்ளன. கொம்பேங்க் டிஜிட்டல் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நாம் நன்றி கூறுகின்றோம்' என்று பிரபாகர் மேலும் தெரிவித்தார்.
கொம்பேங்க் டிஜிட்டலுக்கான சுய பதிவை வாடிக்கையாளர்கள் அனுபவித்து வருகின்றனர், தொழில்துறை மட்டத்திலான பாதுகாப்பு வழிமுறைகளுடன் கூடிய வசதியான பாதுகாப்பையும் இலகுவான செயற்பாட்டையும் வருடம் தோறும் 24 மணிநேரமும் பெற்றுக் கொள்ளக் கூடிய வங்கிச் சேவை வசதிகளை, உலகின் எந்த ஒரு இடத்தில் இருந்தேனும் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் இந்த டிஜிட்டல் வங்கிச் சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கொமர்ஷல் வங்கியில் கணக்கு வைத்துள்ள எவரும் இதுவரை கொம்பேங்க் டிஜிட்டலுடன் பதிவு செய்திராதபட்சத்தில் இந்த வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அவர்கள் தங்களை இணையவழி ஊடாக பதிவு செய்து கொள்ளலாம். முதலாண்டுக்கான வருடாந்த கட்டணமும் இணைவுக் கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என வங்கி அறிவித்துள்ளது.
40 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
49 minute ago
1 hours ago