Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 03 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பர்மெட் பில்டிங் சொலூஷன்ஸ் நிறுவனத்தினர், தமது புதிய பிரத்தியேக காட்சியறையை, இல.12, பராக்கிரம வீதி, கொழும்பு- 14 எனும் இடத்துக்கு இடமாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இப்புதிய காட்சியறை நாட்டின் வர்த்தக மையமாக விளங்கும் பிரதேசத்தில் அமைவதற்கான காரணம், தமது வாடிக்கையாளர்கள் தம்மை இலகுவாக அணுகுவதுடன் தம் சேவைகளைத் துரிதமாகவும், வசதியாகவும் மேற்கொள்வதற்காக எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இப் புதிய காட்சியறை, பிரதான தரம் வாய்ந்த கட்டட மூலப் பொருட்களை வழங்குவது மட்டுமன்றி, தமது வாடிக்கையாளர்களுக்கு அவை பற்றிய மேலதிக விவரங்களையும் கட்டடத் தீர்வுகளையும் வழங்குவதற்கென நிபுணத்துவ குழுக்களையும் அமைத்துள்ளது.
நிர்மாணத்துறையில் முன்னணி வகிக்கும் சுப்பர்மெட் நிறுவனம், நீண்ட காலமாகச் சேவை சிறப்பைக் கொண்டதுடன், நீடித்துழைக்கும், வலுவான வீடுகள் அல்லது வர்த்தக வளர்ச்சியைக் கட்டமைப்பதற்கான தொழில்சார் சிறந்த துத்தநாக - அலுமினிய தீர்வுகளையும் வழங்குகிறது.
மேலும், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பலவகையான, தனித்துவமான உலோகத் தயாரிப்புகள் மற்றும் கூரை, சுவர், உறைப்பூச்சு, வாயில் போன்றவைகளுக்கான தீர்வுகளும் சுப்பர்மெட் நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
2 hours ago