Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 31 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர்கள், தமக்கு ஆர்வமுள்ள விடயங்களைக் காட்சி ரீதியாக வெளிப்படுத்த ஓவியம் ஒரு சிறந்த ஊடகமாகும். நாட்டின் இளைய தலைமுறையினர் இந்த ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள, கொமர்ஷல் வங்கி ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்த ஓவியப் போட்டியில் மொத்தப் பணப் பரிசில்களாக 555,000 ரூபாயை வழங்கவுள்ளது. வங்கியின் பிரத்தியேகமான சிறுவர் கணக்குத் திட்டமான அருணலு திட்டத்தின் கீழ், இந்தப் போட்டி நடத்தப்பட்டு பணப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளளன.
“அருணலு சித்திரம்” என்ற தலைப்பின் கீழ் இந்தப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியில், மூன்று பிரிவுகளில் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது. ஆண்டு ஒன்று மதல் மூன்று வரை ஒரு பிரிவும், ஆண்டு நான்கு முதல் ஆறு வரை ஒரு பிரிவும், ஆண்டு ஏழு முதல் ஒன்பது வரை ஒரு பிரிவும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் தமக்கு விருப்பமான கருப் பொருளில் தமது விருப்புக்குரிய வர்ண வகைகளைப் பாவித்து 18x16 அங்குல அளவு கொண்ட வரைதல் கடதாசியில், ஓவியங்களை அனுப்பி வைக்க வேண்டும். இவற்றை அனுப்பி வைப்பதற்கான கடைசி திகதி 2017 மார்ச் 14 ஆகும்.
ஓவியங்களில் அதற்கான தொனிப் பொருள், மாணவனின் முழு பெயர், கல்வி கற்கும் ஆண்டு, பாடசாலை, முகவரி, அலைபேசி இலக்கம், வரையப்பட்ட திகதி என்பனவும் குறிப்பிடப்பட வேண்டும். ஒவ்வொரு ஓவியமும் குறிப்பிட்ட மாணவரால் வரையப்பட்டது என்பதை பாடசாலை அதிபர் அல்லது வகுப்பாசிரியர் அல்லது கிராம சேவகர் அல்லது சமாதான நீதவான் உறுதி செய்ய வேண்டும்.
கொமர்ஷல் வங்கி சந்தைப் பிரிவு, தபால் பெட்டி இலக்கம் 856, கொழும்பு -01 என்ற முகவரிக்கு ஓவியங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் முதலாவது பரிசை வெல்லும் ஓவியத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்படும். 2ஆம்,3ஆம் இடங்களுக்கு 35 ஆயிரம் ரூபாயும் 25 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும். அதேபோல், 4ஆம் இடத்துக்கு 15 ஆயிரம் ரூபாயும் 5ஆம் இடத்துக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.பரிசுகளுக்கு அப்பால் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் அதிகம் பாராட்டப்படும் பத்து ஓவியங்களுக்கு, 5,000 ரூபாய் வீதமும் பரிசுகள் வழங்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் 15 பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago