Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பரோபகாரி தொழில் அதிபர் ஒடாரா குணவர்தனவின் நன்நோக்குடன் கூடிய பிரத்தியேகமான வர்த்தக முத்திரையான எம்பார்க் இலங்கையில் இயற்கை எழில்மிக்க காலி கோட்டையில் தனது முதலாவது காட்சியகத்தை திறந்துள்ளதன் மூலம் சுதந்திரமான சில்லறை விற்பனையை விஸ்தரித்துள்ளது.
5500 சதுர அடிகளுடன் முற்று முழுதான நவீன வடிவமைப்பு கொண்ட இந்த எம்பார்க் காட்சியகம் இலக்கம் 33 லைட்ஹவுஸ் வீதி, என்ற முகவரியில் அமைந்துள்ளது. செல்லப்பிராணிகளின் ஆர்வத்தோடு தொடர்பு கொண்ட தொனிப் பொருள்களை உள்ளடக்கிய இந்த வர்த்தக முத்திரை மற்றும் புதிய சேர்க்கைகளை உள்ளடக்கிய நாகரிக ஆடைகளின் தொகுப்பு, பாதணிகள், ஆண் பெண் மற்றும் சிறுவர்களுக்கான உதிரிப் பொருள்கள் என்பனவற்றை இந்த காட்சிகம் உள்ளடக்கியுள்ளது.
எம்பார்க் வர்த்தக முத்திரைக்கு அடையாளச் சின்னமாக அமைந்த ஒடாரா வின் நாகரிகத்தோடு இணைந்த அவரால் தத்தெடுக்கப்பட்ட செல்ப்பிராணி நிகோ விற்கு இந்த புதிய காட்சியறையில் தனிப் பெருமை அளிக்கப்பட்டுள்ளது. 'கொபி வித் நிகோ' என்ற பெயரில் பிரத்தியேகமான ஒரு நவநாகரிக கபே உருவாக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பிரத்திகே அலங்காரங்களில் கூட நிகோ மற்றும் அதன் சிறந்த நண்பர்களான பெண்டிட் மற்றும் றோஸி என்பனவற்றின் ஆதிக்கத்தை காண முடிகின்றது. வீதியில் இருந்து தத்தெடுக்கப்பட்ட ஒடாராவின் நாய் குடும்பம் எம்பார்க் உடைகள் மற்றும் உதிரிகளின் தொகுப்பக்களின் பின்னணியில் உள்ள தாக்கம் என்பனவற்றையும் இந்த அலங்காரங்கள் உணர்த்தி நிற்கின்றன.
'எமது முதலாவது காட்சியத்தை இங்கு திறக்க முடிந்துள்ளமை பற்றி எம்பார்க்கில் உள்ள நாம் அனைவரும் மகிழ்ச்சியும் திகைப்பும் அடைந்துள்ளோம். தாம் வாழும் சமூகத்தில் தேவைகள் உள்ள நாய்களுக்கு சிறந்த வாழ்வை அளிப்பதற்காக நாம் எல்லோரும் தினசரி கடுமையாக உழைத்து வருகின்றோம். இந்த காட்சியறை மூலம் இனிவரும் காலங்களில் மேலும் பங்களிப்புக்களை வழங்கலாம் என்று நாம் நம்புகின்றோம். ஏனெனில் இந்த வர்த்தக முத்திரை விற்பனை மூலம் கிடைக்கும் இலாபத்தில் இருந்து தான் எமது திட்டங்களுக்கான பெருமளவு பணம் திரட்டப்படுகின்றது. ஒரு எம்பாhக் உற்பத்தியை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் வீதி நாய் ஒன்றுக்கு தேவையான உதவியை நேரடியாக வழங்கக் கூடியதாக உள்ளது' என்று கூறினார் ஒடாரா குணவர்தன.
'காலி சில்லறை வர்த்தகத்துக்கு மிக உசிதமானதோர் இடமாகும். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இந்த வர்த்தக முத்திரையின் மகத்துவத்தை வெளிப்படுத்திக் காட்ட இது மிகச் சிறந்த இடமாகும். எனவே எமது முதலாவது களஞ்சியசாலையை நாம் காலியில் திறப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்' என்று அவர் மேலும் கூறினார்.
வாரத்தில் ஏழு நாளும் தினசரி காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை இந்த காட்சியகம் திறந்திருக்கும். இலங்கையில் உள்ள சமூகங்கள் வீதி நாய்கள் மீது அன்பு செலுத்தக் கூடிய ஒரு வாழ்வியல் போக்கு மாற்றத்தை ஏற்படுத்த அது காரணமாக அமைந்துள்ளது. மக்கள் வெறுமனே எம்பார்க்கின் நவநாகரிக ஆடைகள், உதிரிகள் பாடசாலை உபகரணங்கள் என்பனவற்றை வாங்குவதோடு மட்டுமன்றி, தேவை உள்ள ஒரு நாயை தத்தெடுத்தோ அல்லது விலை கொடுத்து வாங்கியோ இந்த வர்த்தக முத்திரையின் நன்நோக்கத்தை நிறைவேற்றியும் வருகின்றனர்.
2007ல் ஸ்தாபிக்கப்பட்ட எம்பார்க் சகல உயிரினங்கள் மீதும் அன்பும் கருணையும் செலுத்தும் ஒரு கலாசாரத்தை இந்த நவநாகரிக வர்த்தக முத்திரை மூலம் கட்டியெழுப்புவதை குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றது. அவற்றுக்குத் தேவையான ஆரோக்கிய சிகிச்சைகள், சத்திர சிகிச்சைகள் மற்றும் தடுப்பு மருந்தேற்றல், புதிய எஜமானர்களையும், புதிய வாழ்வுக்கான சூழல்களையும் ஏற்படுத்திக் கொடுத்தல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் அமுல் செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் மூலம் இந்த மாற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஏம்பார்க் உருவாக்கப்பட்டது முதல் கடந்த எட்டு வருட காலத்தில் இலங்கையிலும் கடல் கடந்த நாடுகளிலும் இந்த வர்த்தக முத்திரைக்கு நியாயமான ஆதரவும் வரவேற்பும் கிடைத்துள்ளது.
எம்பார்க்கின் இந்த சேவைகளுக்கான நிதி எம்பார்க் வர்த்தக முத்திரை பொறிக்கப்பட்ட உற்பத்திகளின் விற்பனை மூலம் திரட்டப்படுகின்றது. சமூக மிருகங்களின் நலன் பேணும் இந்த பணிகள் உள்ளுர் மற்றும் சர்வதேச மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளன. இலங்கை சமூகத்தினர் மத்தியில் மிகவும் வேண்டப்படாத அல்லது விரும்பப்படாத ஒரு பிரிவு நாய்கள் மீது இந்தத் திட்டங்கள் விஷேட கவனத்தை ஈர்த்துள்ளன.
38 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
5 hours ago