2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கோல்டன் கீ வைத்தியசாலையின் புதிய இணையத்தளம்

Gavitha   / 2017 ஜனவரி 30 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோல்டன் கீ வைத்தியசாலையின் இணையத்தளம், முன்னேற்றமான செயற்பாடுகளுடன் அண்மையில் புத்தாக்கம் செய்யப்பட்டு புதிய தோற்றத்தையும் உத்வேகத்தையும் பெற்றதை அடுத்து அங்கு செல்வோர் வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு ஒன்லைனில் ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வைத்தியசாலையின் ஏனைய வசதிகள், சேவைகள் பற்றிய தகவல்களை எந்தவித தாமதமுமின்ற உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்குமான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.  

நோயாளிகள் வைத்தியசாலைக்கு நேரில் செல்லாமல் அல்லது அலைபேசி அழைப்பை எடுக்காமலே ஆலோசக வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு வருகை தரும் தினங்களையும் நேரத்தையும் இப்பொழுது அறிந்து கொள்ளலாம். மருத்துவமனை வழங்கும் மேலதிக சேவைகள் பற்றிய தகவல்களையும் விசாரித்து அறிந்து கொள்ள முடியும்.  

மீளமைக்கப்பட்ட இணையத்தளத்துக்கு விஜயம் செய்யும் ஒருவர் சுகாதார முன்னுரிமைகளையும் ஒரு நோயாளரின் கோணத்திலிருந்து தேவைப்படும் தகவல்களையும் பெறக்கூடியதாக வடிவமைப்பும் வரைவும் புதுப்பிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்வர். இதன் மூலம் இணையத்தளத்துக்கு விஜயம் செய்பவர் அல்லது ஒரு நோயாளி அநாவசிய தாமதம் இன்றி சிகிச்சை குறித்தத் தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும் என்றும் வைத்தியசாலை தெரிவித்தது.  

இணையத்தளம் கண், காது, மூக்கு, தொண்டை ஆகியன பற்றிய சுகாதார உதவிக் குறிப்புகள்” உள்ளிட்ட புதிய அம்சங்களை வழங்கும் அதேவேளை, பாவனையாளர் அனுபவத்தையும் விருத்தி செய்கிறது. இந்த சுகாதார உதவிக் குறிப்புகள் இணையத்தளத்தைப் பயன்டுத்துவோர், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பேணக் கூடியதாக தினமும் தரவேற்றம் செய்யப்படுகிறது. இந்த இணையத்தளம் சாத்தியமான நோயாளர்களுக்கு கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றின் நிலைமை குறித்தும் அவர்களுக்கான அறுவைச் சிகிச்சைகள், ஏனைய சிகிச்சைகள் ஆகியன பற்றிய அணுகுமுறை குறித்த பூரணப்பட்டியல் ஒன்றையும் தருகிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X