Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளோபல் ஹவுசிங் அன்ட் ரியல் எஸ்டேட் (பிரைவெட்) லிமிட்டெட், நான்கு வெவ்வேறு குடியிருப்புத் தொகுதிகளை நிறுவவுள்ளதாக அறிவித்துள்ளது. நீர்கொழும்பில்,The Ocean Breeze, கொஸ்வத்தப் பகுதியில் City Edge, ராஜகிரியவில் குளோபல் கிரான்ட் ரெசிடென்சிஸ் மற்றும் கொழும்பு 06இல் மெரியட் ரெசிடென்சிஸ் ஆகியன நிறுவப்படவுள்ளன.
இலங்கையில் முதல் தடவையாகத் தொடர்மனை நிர்மாண நிறுவனமொன்றினால் ஒரே வேளையில், நான்கு பகுதிகளில் தொடர்மனைகள் நிர்மாணிக்கவுள்ளமைத் தொடர்பில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய குடியிருப்புத்தொகுதிகள், நிலைபேறான சூழல் வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதுடன், பொது போக்குவரத்து சேவைகளுடன் வினைத்திறன் வாய்ந்த இணைப்பைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. உள்ளகப்பகுதிகள் வெதுவெதுப்பாக அமைந்துள்ளதுடன், வரவேற்பதாகவும், உடனிகழ்வானதாகவும், நவீன தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.
குளோபல் ஹவுசிங் அன்ட் ரியல் எஸ்டேட் பிரைவெட் லிமிட்டெட் என்பது, 14 வருடகாலமாக இயங்கி வரும் சொத்துக்கள் வடிவமைப்பாளர் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. 100க்கும் அதிகமான ரியல் எஸ்டேட் செயற்றிட்டங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், கொழும்பை அண்மித்தப் பகுதிகளில் ஒன்பது தொடர்மனைத்திட்டங்களையும் கொண்டுள்ளது. தமது சொந்த நிர்மாண அணியினரை கொண்டுள்ளதுடன், இந்த அணியின் மூலமாக, குறைந்த செலவீனத்தில் நிர்மாண செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது.
இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு மேலதிக கட்டணங்கள் எதனையும் செலுத்த வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளது.
குளோபல் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான தசுன் விக்ரமரட்ன கருத்துத்தெரிவிக்கையில், “வெவ்வேறு நான்கு நகரங்களில் இந்தக் குடியிருப்புத்தொகுதிகளை நிறுவ முன்வந்துள்ளதையிட்டு நாம் பெருமையடைகிறோம். இதில், ஸ்ரூடியோ, இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை தொடர்மனைகள் அமைந்திருக்கும். எமது எந்தவொரு தொடர்மனையிலும் முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் முதலீடு என்பது, அவர்களுக்கு பெருமளவு பெறுமதியை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கும்’ என்றார்.
கொழும்பு 06 பகுதியில் நிர்மாணிக்கப்படும் மெரியட் ரெசிடென்சிஸ் என்பது, நடுத்தர அளவு செயற்திட்டமாகும், இது கொழும்பு 06, ஈஸ்வரி வீதியில் நிர்மாணிக்கப்படுகிறது. இதில் 36 அலகுகள் அடங்கியிருக்கும் என்பதுடன், தொடர்மனைகளின் விலை 25 மில்லியன் ரூபாயிலிருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் போது முதலீட்டாளருக்கு அல்லது உரிமையாளருக்கு சிறந்த பெறுமதியை வழங்குவதாக அமைந்திருக்கும்” என்றார்.
16 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago