2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

குளோபல் ஹொல்சிம் விருதுகள் 2015 நிகழ்வில் வெள்ளி விருது

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலையான வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் தொடர்பான மிக முக்கியமான சர்வதேச போட்டியில் இலங்கையில் கிராமிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பயிற்சி மற்றும் சமூக ஈடுபாட்டு திட்டம் வெள்ளி விருதை வென்றுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற Robust Architecture செயலமர்வில் பங்குபற்றிய மிலிந்த பதிராஜா மற்றும் கங்கா ரத்னாயக்க ஆகிய கட்டிடக்கலைஞர்களுக்கே அம்பேபுஸ்ஸவில் அமைந்துள்ள வெற்றித் திட்டத்திற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்வில் இலங்கை இராணுவத்தினர், சிங்ஹ ரெஜிமென்ட் கேர்னல், மேஜர் ஜெனரல் பொனிஃபேஸ் பெரேரா மற்றும் குளோபல் விருதுகள் விழாவின் நடுவர் குழு உறுப்பினர்களான மரியா எட்கின்சன்(அவுஸ்திரேலியா) மற்றும் மெயிஷா பட்டைனா(ஜோர்தான்) ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், மனித ஆற்றலுடன், கட்டிட அமைப்பையும் கட்டியெழுப்பிய இத்திட்டத்தை பாராட்டியிருந்தனர்.

சமீபத்தில் பூர்த்தி செய்யப்பட்ட இந்த நூலகம் ஈர்க்கக்கூடிய கட்டிட அறிக்கையை உருவாக்கியிருந்தது. இக் கட்டிடத்தின் நலன்களை இராணுவத்தினரும், அருகாமையிலுள்ள சமூகத்தினரும் அனுபவித்து வருவதுடன், இது எதிர்கால வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தையிடும் செயல்பாட்டில் சமூகத்தின் விரிவான குறுக்கவெட்டு பிரிவை ஆதரித்து வருவதாக அமைந்துள்ளது. கொழும்பின் வடமேற்காக 45 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இக்கட்டிடமானது சரக்கியல் மற்றும் மட்டு கட்டுமானத்தில் தமது நிபுணத்;தை வெளிப்படுத்தக்கூடிய rammed-earth walls மற்றும் மீள்சுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி நுட்பங்களை கட்டியெழுப்புவதற்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் மூலம் கட்டப்பட்டுள்ளது.

LafargeHolcim அறக்கட்டளையின் குளோபல் நடுவர் குழு மற்றும் நிர்வாக குழுவின் அங்கத்தவர் மரியா எட்கின்சன் இத் திட்டம் தொடர்பாக, 'கல்விசார் திட்டம் மற்றும் குறிப்பிட்ட கட்டுமான தொழில்நுட்ப சிந்தனைகள் ஊடாக திறமைமிக்க மற்றும் உந்துசக்திமிக்க தொழிற்படையினர் உருவாக்கப்பட்டுள்ளனர்' என தெரிவித்தார். 'இத் திட்டத்தின் அடிப்படை செய்தியில் குறிப்பிடத்தக்க மதிப்பு உள்ளதுடன், நூலகத்தின் நிர்மாணமானது சமூகத்தின் இயற்பியல் மற்றும் சமூக அமைப்பை கட்டியெழுப்புவதாக அமைந்துள்ளது' எனவும் குறிப்பிட்டார். இராணுவ வீரர்களுக்கு கட்டுமானம் தொடர்பான நடைமுறை கல்வியை வழங்கும் அதேவேளை மேலதிக திறன்களை விருத்தி செய்வதற்கான ஒரு இடத்தினையும் வழங்கி, வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைய கையாண்ட சிங்ஹ ரெஜிமென்ட்டின் முயற்சியை எட்கின்சன் பெரிதும் பாராட்டினார். பன்னிரண்டு வருடகால போட்டி வரலாற்றில் வெற்றி பெற்ற திட்டத்தின் தளத்தில் நடைபெற்ற முதலாவது விருதுகள் வழங்கும் விழாவாக இது அமைந்திருந்ததுடன், நூலகத்தின் பிரதான வாசிப்பு மண்டபத்தில் இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இராணுவ வீரர்களுக்கு அங்கீகாரம்
இராணுவ தளபதி லுத்தினன் கேர்ணல் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா மற்றும் சிங்ஹ ரெஜிமென்ட் கேர்ணல் மேஜர் ஜெனரல் பொனிஃபேஸ் பெரேரா ஆகியோர் இந்த நூலக திட்டமானது முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தனிப்பட்ட மற்றும் சமூக மட்டத்தில் தமது வாழ்க்கையை மேம்படுத்தும் அர்த்தமுள்ள தொழிலாகவும், அவர்களை மீள்கருவியாக்குவதற்கான பயனுள்ள முறையாக உள்ளதென தெரிவித்தனர். 'இந்த திட்டம் மூலம் இராணுவ வீரர்களுக்கு திறன் அபிவிருத்தி வழங்கப்படுவதால், அவர்கள் இராணுவத்தை விட்டு விலகிய பின்னரும் சமூக பொருளாதார நிபுணத்துவத்தை கொண்டவரர்களாக காணப்படுவர்'. இந்த நூலக கட்டிடத்தின் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்ட அனைத்து தொழிற்பபடையினருக்கும் ஜெனரல்களினால் சாதனைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன.

'இலங்கையில் கட்டுமானத்தின் தரத்தினை மேம்படுத்துவதில் இந்த திட்டம் பெரும் பங்களிப்பு வழங்கும். கட்டிடக்கலைக்கு திறமை வாய்ந்த ஊழியர்கள் அவசியமானதுடன், கட்டுமானத்துறையில் பணியாற்ற எதிர்பார்த்துள்ள ஊழியர்களுக்கும் திறன்கள் அவசியமாகும்' என கட்டிடக்கலை கலைஞர் மிலிந்த பத்திராஜா தெரிவித்தார். 'கட்டிடக்கலைஞர்கள் தொழில் மற்றும் வாடிக்கையாளருக்கு மட்டுமன்றி, சமூகத்தின் மீது பொறுப்பை கொண்டுள்ளவர்களாக காணப்படுகின்றனர். எமது பணியில் அனைத்து பரிமாணங்களையும் கொண்டுவருவதே எமது குறிக்கோளாகும்' என மேலும் அவர் தெரிவித்தார்.

கட்டுமானத் துறையில் நிலையாண்மையை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு
ஆசிய பசுபிக் Lafarge Holcim இற்கு பொறுப்பான நிறைவேற்று குழு அங்கத்தவர் இயன் தக்வ்ரே, 'நிலையான வளர்ச்சிக்கான நிறுவன அர்ப்பணிப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த விருதுகள் அமைந்துள்ளன என குறிப்;பிட்டார். நிலையான கட்டுமானத்திற்கு ஆதரவு வழங்கல், விழிப்புணர்வை கட்டியெழுப்பல் மற்றும் கட்டிடக்கலை செயற்திறன் மற்றும் தரமான வாழ்வை மேம்படுத்துவதற்கான சிறந்த தீர்வுகளை வழங்கல் போன்றவற்றின் ஊடாக கட்டிட பொருட்கள் துறையில் உலக தலைவர் எனும் நிலையை நாம் நிலைப்படுத்தி வருகிறோம்.

LafargeHolcimஇன் அங்கத்தவரான, ஹொல்சிம் லங்கா நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி பிலிப் ரிச்சார்ட் இலங்கையின் கட்டிடக்கலை பராம்பரியத்தை வலுப்படுத்தும் தொழிற்பயிற்சி மற்றும் கட்டிட வடிவமைப்பு போன்றவற்றின் புதுமையான அணுகுமுறை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 'Robust Architecture செயலமர்வானது அதன் பெயருக்கமைய, உள்நாட்டு காலநிலை மற்றும் பொருட்களுடன் சீரமைக்கப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் சமூகம் கொண்டாடக்கூடிய நிலையான அபிவிருத்தி நோக்கிய தீர்வுகளை வழங்குவதாக திகழ்கிறது. இத்திட்டம், அனைத்து கண்டங்களிலிருந்தும் கிடைத்த 6000 சமர்பிப்புகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சிறந்த முதல் மூன்று உலகளாவிய வெற்றி திட்டங்களுள் இலங்கையும் ஒன்றாகவுள்ளமை குறித்து நாம் மிகவும் பெருமையடைகிறோம்' என அவர் கூறினார்.

LafargeHolcim அறக்கட்டளை மற்றும் விருதுகள்
கட்டிடப்பொருட்கள் துறையில் புதிய உலகளாவிய தலைவராக வரும் நோக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஹொல்சிம் மற்றும் Lafarge இணைந்து கொண்டது.

LafargeHolcim அறக்கட்டளை எனும் பெயரின் கீழ் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையான கட்டுமானத்திற்கான செயற்பாடுகளான சர்வதேச விருதுகள், போட்டிகள், கல்வி மன்றங்கள், ஒன்லைன் தகவல் மையம் மற்றும் வெளியீட்டு வரிசைகள் ஆகியவை கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நிலையான கட்டுமானத்திற்கான் Holcim Foundation என அறியப்பட்டு வருகிறது.

LafargeHolcim Foundation மூலம் உருவாக்கப்பட்ட இந்த விருதுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியிலான புதுமையான திட்டங்கள் மற்றும் எதிகால கொள்கை திட்டங்களை அடையாளப்படுத்தும் சர்வதேச போட்டியாக விளங்குகிறது. ஒவ்வொரு மூன்று வருட சுழற்சியிலும் மொத்தமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக வழங்கப்படுகிறது. பிராந்திய மற்றும் உலகளாவிய விருதுகள் போட்டியின் 5ஆவது சுழற்சிக்கான சமர்பிப்புகள் 2016இன் இரண்டாம் பாதியில் இடம்பெறவுள்ளது. www.lafargeholcim-foundation.org


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X