Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 09 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
International Institute of Health Sciences (IIHS) இன் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சியியலின் தகவு மையமாக விளங்கும் BioInquirer முதன் முறையாக “BioInquirer” கல்விக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இக்கண்காட்சி எதிர்வரும் 15ஆம் திகதியன்று காலை 9.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற உள்ளது.
சர்வதேச அங்கிகாரம் பெற்ற 50க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் இக்கண்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளன. மாணவர்கள் தமது உயர் கல்விக்கான பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பட்டப்படிப்பு பாடநெறிகளைத் தெரிவு செய்வதற்கு இதுவோர் அரிய வாய்ப்பாகும்.
பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுடன் நேரடியாக கலந்துரையாடி தமது உயர் கல்வித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாது உயர் அங்கிகாரத்துடன் கூடிய சர்வதேச மட்டத்திலான பல்வேறு பல்கலைக்கழங்கள் சங்கமிக்கும் நிகழ்வாகவும் இதனைக் குறிப்பிட முடியும். அத்துடன் பல்வேறு தொழில்சார் வல்லுநர்களும் தொழில் வழிகாட்டிகளும் இக் கண்காட்சியில் பங்கேற்பதனால் அவர்களிடமிருந்து மாணவர்களுக்கு தமது உயர் கல்விக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்ள முடியும். தொழில்சார் வழிகாட்டல்கள் மற்றும் உயர்கல்வி தொடர்பான கருத்தரங்குகளும் இக்கண்காட்சியில் நடைபெறவுள்ளதோடு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கென சிறப்பு தொழில்சார் செயலமர்வுகளும் நடைபெறவுள்ளன.
உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் தமது உயர் கல்வியினைக் கற்பதற்கும், மற்றும் தமது எதிர்கால வாழக்கைக்குப் பலமானதொரு அடித்தளத்தை இட முடியும். இக் கல்விக் கண்காட்சியில் நடைபெறவுள்ள விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ள விரும்புவோர் அதற்காக முன்னதாகவே பதிவு செய்திருத்தல் வேண்டும்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago