Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2016 நவம்பர் 03 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
Huawei நிறுவனம், இலங்கையில் முன்னெடுத்து வருகின்ற விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் மற்றுமொரு அத்தியாயமாக கொழும்பில், லிபர்ட்டி பிளாஸா வர்த்தக மையத்தின் கீழ்த் தளத்தில் வர்த்தக நாமத்தின் புதிய அனுபவ காட்சியறையொன்றை திறந்து வைத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய Huawei திறன்பேசிகள், tablet சாதனங்கள் மற்றும் ஏனைய சாதனங்களை நேரடியாக அனுபவித்து அவை தொடர்பில், தீர்மானிப்பதற்கு இடமளிக்கும் வகையில் நேரடி இடைத்தொடர்பாடல் அனுபவங்களைக் கொwwண்ட கருமபீடங்களுடன், இப்புதிய அனுபவக் காட்சியறை வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அனைத்து பிரதானப் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களில் தனது அடிச்சுவட்டை விஸ்தரிக்க வேண்டும் என்பது தொடர்பில் Huawei கொண்டுள்ள மும்முரமான திட்டங்களுக்கு, இப்புதிய அனுபவக் காட்சியறையைத் திறந்து வைத்துள்ளமை துணை போகின்றது.
வர்த்தகத் துறை பிரபலங்களுள் ஒருவரான, திலித் ஜயவீர பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டுத் தலைமை அதிகாரியான ஹென்றி லியு, இலங்கையில் Huawei சாதனங்களுக்கான பொது முகாமையாளரான, கல்ப பெரேரா மற்றும் சிங்கர் ஸ்ரீ ,லங்கா பிஎல்சி நிறுவனத்தின் தொழிற்பாடுகளுக்கான பணிப்பாளரான சந்தன சமரசிங்க ஆகியோர் ஒன்றிணைந்து இந்த அனுபவ காட்சியறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளனர்.
இச்சந்தையில் நிறுவனம் கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பில் இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டுத் தலைமை அதிகாரியான ஹென்றி லியு அவர்கள் கூறுகையில், “வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதன் மூலமாக, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் Huawei முன்னிலை வகித்துவருகின்றது.
இலங்கையில் ஒட்டுமொத்தத் தர அனுபவத்தை வழங்கி ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தில் உள்ள வர்த்தக நாமமாகத் திகழ வேண்டும் என்பதே எமது பிரதான இலக்கு. இது எமது சில்லறை வர்த்தகத்துறையை வலுப்படுத்துவதுடன், எமது வாடிக்கையாளர்கள் மிகச் சிறந்த முன்னணி சாதனங்களைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது மட்டுமன்றி, நியாயமான விலைகளில் அவர்கள் திறன்பேசிகளைக் கொள்வனவு செய்வதற்கும் வழிவகுத்துள்ளது” என்றார்.
19 minute ago
23 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
1 hours ago
1 hours ago