Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 22 , மு.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமமான ‘யூனியன் மனிதாபிமானம் - அறிவார்ந்த, ஆரோக்கியமான, வளமான நாளை’ என்பதன் கீழ், நாடு முழுவதிலும் தொடர்ச்சியாக சமூகங்களுக்கு விழிப்புணர்வூட்டி மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அவசியமான வழிகாட்டல் மற்றும் கல்வியறிவூட்டல் போன்றன இந்தத் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக தலசீமியா, டெங்கு மற்றும் நீரிழிவு எனும் மூன்று நோய்களை தவிர்த்துக் கொள்வதற்கு பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய முக்கியமான தகவல்களை பகிர்ந்தளிப்பது என்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் அமைந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளின் உதவி மற்றும் கிளை வலையமைப்பின் அர்ப்பணிப்பான நடவடிக்கைகள் போன்றவற்றினூடாக யூனியன் மனிதாபிமானம் வெற்றிகரமாக பரிபூரண நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை 2018ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாடு முழுவதிலும் முன்னெடுத்திருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் ஊடாக இந்த நடவடிக்கைகளுக்கு பெறுமதி வாய்ந்த பங்களிப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், இதற்காக குருநாகல் தேசிய தலசேமியா நிலையம், சென். ஜோன் அம்பியுலன்ஸ் மற்றும் ஹேமால்ஸ் அடொல்சென்ட் அன்ட் அடல்ட் தலசீமியா கெயார் ஆகியவற்றுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இந்தச் செயற்பாடுகளினூடாக சுமார் 28 தலசீமியா குருதி பரிசோதனை நிகழ்ச்சிகள் மற்றும் 10 தலசீமியா விழிப்புணர்வு நிகழ்வுகள் 2018ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் முன்னெடுத்திருந்தது.
நீரிழிவு பரவுவதை தடுப்பது, அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பில் தொடர்ச்சியாக யூனியன் மனிதாபிமானம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததுடன், பிரதேச வைத்திய அலுவலகங்களின் வழிகாட்டலின் கீழ் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மொத்தமாக 41 நீரிழிவு இனங்காணல் நிகழ்ச்சிகள் இக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
42 minute ago
46 minute ago
2 hours ago