Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
Fashion Bug, இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து, கொழும்பு புகையிரத நிலையத்தின் குறியீட்டு அடையாளங்கள் மற்றும் வழிகாட்டல் பலகைகள் போன்றவற்றைப் புனருத்தாரணம் செய்திருந்தது.
2013ஆம் ஆண்டு முதல் இந்த வருடமும் இச்செயற்பாட்டில் Fashion Bug ஈடுபட்டுள்ளதுடன், எதிர்காலத்திலும் இது போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளது. இதன் மூலமாக, தனியார் நிறுவனங்கள், பொதுச் சேவைகளில் எந்தளவில் இயன்றவளவு பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளன என்பது புலப்படுகிறது. ஆடை விற்பனைத்தொடரான Fashion Bug தனது தினசரி செயற்பாடுகளில் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்குகிறது. நிறுவனத்தின் கூட்டாண்மைக் கொள்கையில் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாகவும் இது அமைந்துள்ளது.
Fashion Bugஇன் பதில் பொது முகாமையாளர் கலாநிதி எஸ்.எச்.எம். ஃபராஸ் கருத்துத் தெரிவிக்கையில், “சமூகத்துக்கு மீள வழங்குவது என்பதில் நாம் அதிகளவு ஈடுபாட்டைக் கொண்டுள்ளோம். இந்த செயற்றிட்டத்தில் நாம் முதலீடு செய்துள்ள வளங்கள், நேரம் மற்றும் நிதி போன்றன மிகவும் பெறுமதி வாய்ந்தனவாக அமைந்துள்ளன. ஏனெனில் தினசரி கொழும்பு கோட்டைக்கு விஜயம் செய்யும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு இந்த அடையாளங்களின் மூலம், இலகுவாக வழிகாட்டக்கூடியதாக அமைந்திருக்கும்” என்றார்.
ஒவ்வொரு வருடமும் நிறுவனம் பல மில்லியன் ரூபாய்களை நிறுவனம் செலவிடுவதுடன், இரு மாத காலப்பகுதியினுள் மறுசீரமைப்பு செயற்பாடுகளைப் பூர்த்தி செய்யும். இவர்களுக்கு இலங்கை புகையிரத திணைக்களத்தின் அதிகாரிகளின் பங்களிப்பும் கிடைக்கும்.
வருடாந்தம் நாடு முழுவதிலும் வெவ்வேறு சமூகப் பொறுப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்காக Fashion Bug இனால் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்படுகிறது. இதில் விளையாட்டு மற்றும் கல்விச் செயற்பாடுகள் முதல் சுகாதாரம், பொதுச் சேவைகள் மற்றும் அவற்றுக்கும் அப்பாற்பட்டவையும் அடங்கியுள்ளன. மேலும், Fashion Bugஇன் விருதை வென்ற சமூகப் பொறுப்புணர்வு செயற்றிட்டமான சிசு திரிமக 12,000 மாணவர்களுக்கு இதுவரையில் அனுகூலங்களை ஏற்படுத்தியுள்ளது. 120 பாடசாலைகளில் 100,000 மாணவர்கள் எனும் இலக்கை எய்தும் வரையில் இந்த பணி தொடரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
34 minute ago
34 minute ago
38 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
34 minute ago
38 minute ago
40 minute ago