2024 மே 21, செவ்வாய்க்கிழமை

சிரேஷ்ட பிரஜைகளின் SLT-MOBITEL வாழ்வுக்கு வளமூட்டுகின்றது

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசத்துக்கு சிரேஷ்ட பிரஜைகள் ஆற்றிய பெறுமதி வாய்ந்த பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்பான சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, புத்தாக்கமான புதிய பக்கேஜை அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக சிரேஷ்ட பிரஜைகளின் வாழ்வுக்கு வளமூட்ட எதிர்பார்த்துள்ளது.

இந்த விசேட பக்கேஜில், சகாயமான விலையிடல் போன்ற முக்கியமான உள்ளம்சங்கள் அடங்கியுள்ளன. ரூ. 300 (வரிகள் தவிர்த்து) எனும் மாத வாடகைக்கு, சிரேஷ்ட பிரஜைகளுக்கு தமது தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.  மொபிடெல் மற்றும் ஏனைய வலையமைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் வெளிச் செல்லும் அழைப்புகளை இந்த பக்கேஜ் வழங்குவதுடன், அதனூடாக சிரேஷ்ட பிரஜைகளுக்கு தமது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் எந்நேரத்திலும் தொடர்பில் இருக்க முடியும்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரீட்சியமான சிரேஷ்ட பிரஜைகளுக்கு எந்த வலையமைப்புக்கும் 1000 இலவச SMS களை அனுப்பும் சுதந்திரம் இந்தப் பக்கேஜினூடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரஜைகள் ஒன்லைனில் தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவத்தை SLT-MOBITEL உணர்ந்துள்ளது. பக்கேஜில் 2GB எனிடைம் டேட்டா பாவனை வழங்கப்பட்டுள்ளதுடன், சிரேஷ்ட பிரஜைகளுக்கு டிஜிட்டல் உள்ளம்சங்களுடன் தொடர்பில் இருக்கும் வசதியை வழங்கியுள்ளது.

தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், புதிய பக்கேஜ் செலவு சிக்கனமான தீர்வாக அமைந்துள்ளது. எந்தவொரு வலையமைப்பு குரல் அழைப்புகளுக்கும் சிக்கனமான வகையில் ரூ. 1.50/- கட்டணம் மட்டும் அறவிடும் வகையில் அமைந்துள்ளது. மேலும், எந்த வலையமைப்புக்கும் SMS அல்லது  MMS அனுப்புவதற்கு 20 சதம் மாத்திரமே அறவிடப்படும்.

உலகம் தொழில்நுட்ப ரீதியில் வேகமான முன்னேறி வரும் நிலையில், டிஜிட்டல் இடைவெளியை இல்லாமல் செய்வதற்கு SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளது. சிரேஷ்ட பிரஜைகளுக்கான முன்னணி புதிய பக்கேஜினூடாக, ஓய்வூதியம் பெறுவோருக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் தமது அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பை SLT-MOBITEL மீள உறுதி செய்துள்ளது. அத்துடன் அவர்களின் பிரத்தியேகமான தொடர்பாடல் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கும் வசதியளிக்கின்றது. மாறுபடும் டேட்டா தேவைப்பாடுகளை உள்வாங்கி, இந்த பக்கேஜில், மேலதிகமாக பயன்படுத்தும் ஒவ்வொரு MB க்கும் 30 சதம் வீதம் கட்டணம் அறவிடப்படும்.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான டிஜிட்டல் பகுதியை மாற்றியமைப்பதற்கான உள்ளம்சத்தை இந்த புதிய பக்கேஜ் கொண்டுள்ளது. தொடர்பில் வைத்திருப்பதற்கு அவசியமான சாதனங்களை வழங்குவதுடன், தகவல் அறிந்து கொள்ளவும் ஈடுபாட்டில் இருப்பதற்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .