Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாலா என்டர்பிரைசஸ் நிறுவனம் கையடக்க அலைபேசியினூடாக உலகின் எப்பகுதியிலிருந்தும் தமது இல்லத்தின் சகல மின் உபகரணங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய புதிய App ஒன்றை இலங்கையில் முதல் தடவையாக அறிமுகம் செய்யவுள்ளது.
Smart Life App என அழைக்கப்படும் இந்த புதிய App ஊடாக Artificial Intelligence-AI மற்றும் இணைய தொழில்நுட்பத்தினூடாக மின் உபகரணங்களை இயக்கும் தொழில்நுட்பத்தை The Internet of Things-IOT என்பதை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகின்றது. இந்த Smart Life App ஊடாக வீட்டின் கதவு, ஜன்னல்கள், தொலைக்காட்சி, வானொலி, CCTV கமெரா, மின் குமிழ்கள், ஆழிகள், மின்சொருகிகள், குளிர்சாதன பெட்டிகள் போன்ற சகல சாதனங்களையும் தமது அலைபேசியினூடாக கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு மேலதிகமாக, நீர்கசிவு, மின் கசிவு, மரங்களின் சரிவு, சுற்றுப் புறச்சூழலில் ஏற்படும் மாற்றம், வெப்பநிலை மாற்றம் போன்றவற்றை வீட்டில் இருக்கும் போது அல்லது வீட்டிலிருந்து வெளியே எங்கிருந்தாலும் அறிந்து கொள்ள முடியும். இதனூடாக இடர்களையும், விபத்துகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.
நவீன உலகில் Smart House” Smart Business” Smart City போன்றவற்றுக்கு வேகமாக மாறிய வண்ணமுள்ளதுடன், இதற்கு நிகராக உலக மக்கள் மத்தியில் Smart Life என்பது வளர்ச்சியடைந்த வண்ணமுள்ளது. இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு உயர் தன்மையான உலகில் காணப்படும் நவீன தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப ICT உத்தரவாதத்தைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சகாயமான பணத்துக்கு பெற்றுக் கொடுக்கும் புகழ்பெற்ற நிறுவனமான சாலா என்டர்பிரைசஸ், இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை Smart Life க்கு மாற்றியமைக்கும் முதல் அங்கமாக இந்த புதிய App ஐ அறிமுகம் செய்யவுள்ளது.
Smart Life என்பது உலகின் புகழ்பெற்ற AI மற்றும் IOT தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு நவீன உலகில் கட்டியெழுப்பப்பட்ட வண்ணமிருக்கும் சொகுசான புதிய வாழ்க்கை முறையாக அமைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் மய்யப்பகுதியில், 100 மில்லியனுக்கும் அதிகமான மென்பொருள் கட்டமைப்புகள் Smart Life உடன் இணைந்திருந்தன. Smart Life அலகுகள், உலகப் புகழ்பெற்ற AI மற்றும் IOT தொழில்நுட்பத்தில் தங்கியுள்ளன. AI தொழில்நுட்பம் என்பது, மனித மூளைக்கு நிகரான திறன் வாய்ந்த தன்மை வாய்ந்த செயற்கை சிந்தனைத் திறனாகும். நவீன உலகில் நாம் மேற்கொள்ளும் பல செயற்பாடுகளுக்காக செயற்கை மூளையை பயன்படுத்துவதுடன், இது படிப்படியாக புகழ்பெற்ற வண்ணமுள்ளது.
செயற்கை மூளையின் உச்சகட்ட தயாரிப்பாக ரோபோ இயந்திரத்தை குறிப்பிட முடியும். IOT என்பது தொழில்நுட்பத்தை பொருள்கள், சாதனங்கள், வாகனங்கள், கட்டடங்கள் போன்றவற்றை இணைப்புகள், தொடர்புகள், இணையம் போன்றவற்றினூடாக தொடர்புபடுத்திப் பெற்றுக் கொள்ளும் தரவுகளினூடாக மென்பொருள்களை இயக்குவதை குறிக்கின்றது. 2020 ஆம் ஆண்டளவில், உலகம் முழுவதிலும் இவ்வாறான சாதனங்கள் 50 பில்லியன் வரை இந்த தொழில்நுட்பத்தினூடாக இணைக்கப்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
12 minute ago
2 hours ago
2 hours ago