Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
J.A. George / 2021 மார்ச் 03 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றுப் பரவலின் போது மனநிலை சுகாதார விழிப்புணர்வு மற்றும் நலன் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து
உலகளாவிய ரீதியில் நிலவும் இந்த நெருக்கடியான சூழலில், கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் குணமாக்குவது தொடர்பில் பலரின் கவனம் செலுத்தப்படுகின்றது. குறிப்பாக வக்சீன் அல்லது நாடு முழுவதையும் தொற்றிலிருந்து விடுபடச் செய்வது என எதுவாக இருந்தாலும், இந்த நோயிலிருந்து முற்றாக விடுபடுவது என்பதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும், கொவிட்-19 தொற்றுப் பரவல் காணப்படும் சூழலில் உளவியல் சுகாதார விழிப்புணர்வு மற்றும் நலன் தொடர்பில் போதியளவு கவனம் செலுத்தப்படவில்லை. எனவே, யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் இலங்கை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஆகியன இணைந்து இந்த விடயம் தொடர்பில் நிகழ்ச்சித் திட்டங்களினூடாக கவனம் செலுத்த முன்வந்திருந்தன.
இந்தத் தொற்றுப் பரவலுடன் மன உளைச்சல் மற்றும் கவலை தொடர்பான பிரச்சனைகள் பல எமது நாட்டில் நிலவுகின்றன. குடிமக்கள் வருமானத்தை இழக்கும் நிலை, அன்புக்குரியவர்களை நேரடியாக சென்று பார்வையிட முடியாத நிலை போன்றதொரு சூழ்நிலையில், இந்த நிலைமைகள் மேலும் அதிகரித்த வண்ணமுள்ளன.
எவ்வாறாயினும், இந்தப் பிரச்சனைகள் காணப்பட்ட போதிலும், அனைவரும் முன்வந்து உதவி கோருவதில்லை. அவ்வாறு கோரும்பட்சத்தில் சமூகம் தம்மை எவ்வாறு நோக்கும் எனும் ஒருவித அச்சம் அவர்கள் மத்தியில் நிலவுகின்றது. எனவே, மனநிலை சுகாதாரம் தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களினூடாக இவ்வாறான நபர்களுக்கு உதவவும் விழிப்புணர்வூட்டவும் யூனியன் அஷ்யூரன்ஸ் எதிர்பார்த்து, சுகாதார மேம்பாட்டுப் பணிமனையுடன் கைகோர்த்தது.
வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மத்தியிலும் ஒரு விதமான மனக்குழப்பநிலை காணப்படுகின்றது. நோய்வாய்ப்படுபவர்கள் எதிர்பாராதவிதமாக இந்த நோய்க்கு ஆளாகின்ற போதிலும், அவர்கள் வெட்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்து, “கொவிட்-19 தொற்றுக்குள்ளானதன் பின்னர் சமூக இழுக்குகளை எதிர்கொள்வது” மற்றும் “பொதுவில் கொவிட்-19 உடன் எவ்வாறு சமாளிப்பது” எனும் தலைப்புகளில் விழிப்புணர்வுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட தொடர் நேர்காணல்களினூடாக சில நிபுணர்கள் இந்த விடயங்கள் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தாமாக முன்வந்துள்ளதை காண முடிந்தது.
டொக்டர் சுனேத் ராஜவசன்
குடும்ப சுகாதார வைத்தியர்
கொவிட்-19 தொற்றுக்குள்ளான வைத்தியரான சுனேத் ராஜவாசன் குறிப்பிடுகையில், “தொற்றாத ஒரு வரப்பிரசாதம் இதுவாகும். இந்தத் தொற்றுக்கு உள்ளான அயலவர்களைப் பற்றி அறிந்து கொள்வதையிட்டு சௌகரியமாக உணருமாறும், இதுவும் நபர் ஒருவரின் உள நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். உடல் ரீதியில் சுகயீனமடையாத போதிலும், சமூகத்தினால் குறித்த நோயாளியும் குடும்பத்தாரும் அழுத்தத்துக்கு ஆழாக்கப்படுகின்றனர்.” என்றார்.
டொக்டர் நயனி தர்மகீர்த்தி
சுகாதார மேம்பாட்டு அலுவலகம்
இந்த தொடர்பில் வைத்தியர் நயனி தர்மகீர்த்தி பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய போது, ‘தொற்றுக்குள்ளான அயலவர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு, அவர்களின் முன்னேற்றம் மற்றும் நலன் தொடர்பில் விசாரிப்பது உகந்தது, ஏனெனில் இந்த நோயை நாம் அனைவரும் இணைந்தே எதிர்கொண்டுள்ளோம்.” என்றார்.
பேராசிரியர் அத்துல சுமதிபால
மனநல ஆரோக்கிய சிகிச்சை தொடர்பான பேராசிரியர்
கீல் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம்
தலைவர் - தேசிய அடிப்படை ஆய்வுகள
மனநிலை சுகாதாரம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் அதுல சுமதிபால குறிப்பிடுகையில், “தவறான தகவல்களை நம்பி அச்சமடையாமல், உங்களைச் சூழ்ந்துள்ளவர்களை தமது வழமையான தினசரி வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு ஊக்கமளிப்பதுடன், அரசாங்கத்தினதும் சுகாதார அதிகார அமைப்புகளினாலும் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்றத் தூண்டவும்.” என்றார்.
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தொடர்பாடல் என்பது முக்கியமானதாக அமைந்துள்ளது. எனவே, இந்த அத்தியாவசியமான திட்டங்களினூடாக, காப்புறுதிதாரர்களுக்கும், நாட்டுக்கும் மீள வழங்க யூனியன் அஷ்யூரன்சுக்கு முடிந்துள்ளதுடன், தனது தொனிப்பொருளான “உங்கள் வாழ்க்கைக்கு எங்களது பலம்” என்பதற்கமைய திகழவும் முடிந்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் கைகோர்த்து செயலாற்றுவதனூடாக நாட்டின் சகல பாகங்களையும் சென்றடையக்கூடியதாக அமைந்துள்ளது.
இலங்கையின் அதிகளவு விருதுகளை வென்ற காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்வதுடன், கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்கின்றது. யூனியன் அஷ்யூரன்சினால் வழங்கப்படும் காப்புறுதித் தீர்வுகள் கல்வி, சுகாதாரம், முதலீடு, பாதுகாப்பு முதல் ஓய்வுகாலத்துக்கான தேவைகள் வரை இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்றது.
துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18.2 பில்லியனைத் தன்வசம் கொண்டுள்ளதுடன், ஆயுள் நிதியமாக ரூ. 41.3 பில்லியனைக் கொண்டுள்ளது. 2020 நவம்பர் மாதத்தில் மூலதன போதுமை விகிதம் (CAR) 447% ஆகவும் காணப்பட்டது. நாடு முழுவதிலும் 76 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 3000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்குகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago