2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சுற்றுலா, விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிகள்

Editorial   / 2019 பெப்ரவரி 08 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்  

இலங்கையில், அவுஸ்திரேலிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து ஸ்கில்ஸ் போர் இங்க்ளுசிவ் வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலா,  விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளன.   

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதற்காக விண்ணப்பிக்கலாம். முன் அனுபவங்கள் எதுவும் தேவையில்லை, பயிற்சிகள் அடிப்படையில் இருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், நீங்கள் ஏற்கெனவே சுற்றுலா, விருந்தோம்பல் துறையில் தேர்ச்சி பெற்றவராயின், நீங்களும் விண்ணப்பிக்கலாம். உங்கள் திறன்களை மேலும் விருத்தி செய்வதற்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.  

இப்பயிற்சியின் முடிவில் உலகளாவிய ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட சான்றிதழ்களுடன் சுற்றுலா, விருந்தோம்பல் துறையில் தகுந்த தொழில் வாய்ப்பை பெறுவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும். 

ஏற்​கெனவே 4,000 பேர் விண்ணப்பித்திருக்கும் நிலையில், மேலும் 2,000 பேரை இணைத்துக்கொள்வதற்கு வாய்ப்புண்டு.     

online மூலமாக விண்ணப்பிப்பதற்கு கீழ்காணும் link ஐ அழுத்துங்கள்.  https://goo.gl/forms/rEFLX7VNPFD89Yrg2 மேலதிக விவரங்களுக்கு facebook ஊடாக இணைந்திருங்கள் fb.me/joinTnH

மேலதிக விவரங்கள், தொடர்புகளுக்கு  0117 21 21 30 , 076 455 0721ஆகிய இலக்கங்களை அணுக முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X