2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

செரமிக், சேலை இறக்குமதிக்கு அனுமதி

S.Sekar   / 2021 மார்ச் 24 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

செரமிக் தயாரிப்புகள் மீதான இறக்குமதித் தடையை நிபந்தனையுடன் தளர்த்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

180 நாள் கடன் திட்டத்தின் பிரகாரம் செரமிக் தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2021 பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன் சேலைகள் இறக்குமதிக்கான அனுமதியும் 90 நாட்கள் கடன் திட்டத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பத்திக் மற்றும் ஹான்ட்லூம் ஆடைகள் உள்ளடக்கப்படவில்லை.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதி அமைச்சர் எனும் வகையில் முன்வைத்திருந்த பிரேரணையை அமைச்சரவை அமைச்சர்கள் அனுமதியளித்துள்ளனர்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் அனுமதிக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X