S.Sekar / 2021 பெப்ரவரி 26 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கியின் இஸ்லாமிய வங்கி பிரிவு சமீபத்தில் முடிவடைந்த இலங்கை இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி தொழில் விருது (SLIBFI) 2019 இல் ஆண்டின் அதி சிறந்த ஒப்பந்தத்திற்கான கூட்டு தங்க விருதைப் பெற்றது. மேலும், தெற்காசிய இஸ்லாமிய நிதி மன்றம் விருது (IFFSA) 2020 பிராந்திய நிகழ்வில் வெண்கல விருதை பெற்ற செலான் வங்கி, இஸ்லாமிய நிதி உலகில் இலங்கைக்கு முக்கிய இடத்தைப் உறுதிசெய்தது. Timex Bukinda Hydro (U) Ltd நிறுவனம் பெற்றுக்கொண்ட கடன் வசதியின் ஒரு பாகமாக முஷாரகா வசதியொன்றின் மூலம் வெற்றிகரமாக நிதியளித்ததற்காக செலான் வங்கி இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டது.
இலங்கையில் இஸ்லாமிய நிதிக்கான முன்னணி தொழில்துறை விருதுகளான SLIBFI விருதுகள், பக்கச்சார்பற்ற மதிப்பீட்டு செயல்முறையை உறுதி செய்யும் முகமாக KPMG நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படுகின்றன. KPMGயின் வழிகாட்டுதலின் கீழ், புகழ்பெற்ற நடுவர்கள் குழு இறுதித் தீர்ப்புகளை வழங்குகிறது. தெற்காசிய இஸ்லாமிய நிதி மன்றம் (IFFSA) 2019 விருதானது, தெற்காசிய பிராந்தியத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைத்தீவு, இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி தொழில்துறைபயிற்சியாளர்கள் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித்துறையில் மேற்கொண்ட சாதனையாளர்களை அங்கீகரிக்கின்றது.
"இஸ்லாமிய வங்கி முறை உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, மேலும் அது எங்கள் வாடிக்கையாளர்களில் சிலரின் விருப்பமான தேர்வாகும். எங்கள் வாடிக்கையாளருக்கு இதுபோன்ற ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை எளிதாக்குவதில் செலான் வங்கியின் இஸ்லாமிய வங்கி பிரிவு பெருமை கொள்கிறது. மேலும், விருது பெற்ற இந்த ஒப்பந்தம் இலங்கையை உலகளாவிய இஸ்லாமிய நிதி வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது ”என்று செலான் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ரமேஷ் ஜயசேகர தெரிவித்தார்.
Timex Bukinda Hydro (U) Ltd நிறுவனத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நிதி வசதி வளங்கள் 20 ஆண்டுகால குறுகிய வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய வங்கி மற்றும் நிதியுதவி துரையின் திறமைகளையும் திறன்களையும் இலங்கைக்கு எடுத்துக்காட்டி உள்ளது. வெளிநாடுகளில் நீர் மின் நிலையங்களை நிறுவுவதில் இலங்கையின் மேலாண்மை நிபுணத்துவம் மற்றும் பொறியியல் திறன்களை இது சித்தரிக்கிறது, மேலும் இதன் மூலம் இலங்கை உலகளாவிய இஸ்லாமிய வங்கி வரைபடத்தில் சேர்கிறது.
7 minute ago
10 minute ago
20 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
20 minute ago
22 minute ago