Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, தனது 170 கிளைகளைச் சேர்ந்த, சிறப்பாகச் செயலாற்றியிருந்த ஊழியர்களைக் கௌரவிக்கும் வகையில், வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை அண்மையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது.
தொடர்ச்சியாக 7ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செலான் வங்கியின் விருதுகள் வழங்கும் நிகழ்வினூடாக, 2018ஆம் ஆண்டில், வங்கியுடன் பெறுமதிகளை கட்டியெழுப்பிய தனிநபர் இலக்குகளை நிறைவேற்றியவர்கள், கிளை மட்டத்தில் இலக்குகளை எய்தியவர்கள், பிராந்திய மட்டத்தில் இலக்குகளை எய்தியவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
ஏழு பிரிவுகளில் இந்த ஆண்டு வினைதிறன் விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பம்பலபிட்டி கிளை, 2018ஆம் ஆண்டின் சிறந்தக் கிளையாகத் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், இரண்டாமிடத்தை, பத்தரமுல்ல கிளை, மூன்றாமிடத்தை கொட்டாவ கிளை ஆகியன சுவீகரித்திருந்தன.
மெட்ரொபொலிடன் II பிராந்தியம் சிறந்த வினைதிறனைப் பதிவு செய்த பிராந்தியமாக அமைந்திருந்தது.
பிரதான விருதுகளுக்கு மேலதிகமாக, ஒவ்வொரு கிளைப் பிரிவு, பரந்தளவு பிரிவுகளான வைப்புகள், முற்பணங்கள், CASA, வியாபார சேவைகள் போன்ற வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வெற்றியாளர்களுக்கு 51 விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “2018ஆம் ஆண்டில் நிலவிய கடுமையான சூழ்நிலைகளிலும் எமது அணியினர் சிறந்த சாதனைகளைப் பதிவு செய்துள்ளதைப் காண்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதனூடாக உயர் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதுடன், ஆழமான உறவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சாதனைகளினூடாக செலான் வங்கி குடும்பத்துக்குள் நம்பிக்கை, பரஸ்பர மதிப்பு, அர்ப்பணிப்பு போன்றன உறுதி செய்யப்பட்டிருந்தன. எமது ஊழியர்களே எமது மாபெரும் சொத்துகளாக நாம் கருதுகிறோம் உள்நாட்டு வங்கியியல் துறையில் ஒப்பற்ற நிலையை எய்துவதற்காக நாம் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொள்வோம்” என்றார்.
24 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
37 minute ago