2025 ஜூலை 30, புதன்கிழமை

ஜனசக்தி Full Option Appathon சவாலில் While Loop அணி வெற்றி

Gavitha   / 2016 நவம்பர் 28 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனசக்தி Full Option Appathon எனும் தொழில்நுட்ப சவாலின் அங்குரார்ப்பணப் போட்டியின், மாபெரும் இறுதிப்போட்டியில் “While Loop” அணி வெற்றியைத் தனதாக்கியுள்ளதுடன், ஒரு மில்லியன் ரூபாய் என்ற மாபெரும் பணப்பரிசையும் வென்றுள்ளது. மிகவும் கடுமையானப் போட்டிக்கு மத்தியில் இரண்டாம் இடத்தைத் தனதாக்கிய “Winter Rise” அணி ரூ. 200,000 பணப்பரிசை வென்றுள்ளது. இறுதிப் போட்டியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்ட “Four Loop” “Parallax” மற்றும் “In-Laws” அணிகள் தலா ரூ. 100,000 பணப் பரிசைத் தமதாக்கியிருந்தன.  

“போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படும் பிரசினைகளுக்கான தீர்வுகள்” என்ற தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட ஜனசக்தி Full Option Appathon சவால், நிகழ்வின் மாபெரும் இறுதிப்போட்டியானது, அண்மையில் கொழும்பிலுள்ள Park Street Mewsஇல் இடம்பெற்றது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பின் (ICTA) முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முகுந்தன் கனகே இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், கொழும்பு பல்கலைக்கழக கணினி கற்கைப் பிரிவைச் சார்ந்த பேராசிரியர் கிஹான் விக்கிரமநாயக்க அவர்கள் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.  

J. Walter Thompson நிறுவனத்தின் இலங்கை கிளைக்கான, பிரதம நிறைவேற்று அதிகாரியான அலீனா ஹாஜி ஒமர்,CodeGen நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான கலாநிதி ஹர்ஷ சுபசிங்க, Innovation Quotient நிறுவனத்தின் ஸ்தாபகரான அஹமட் இர்ஃபான், மற்றும் OMAK Technologies (Pvt.) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முகாமைத்துவப் பணிப்பாளருமான எஹந்த்த சிறிசேன ஆகிய தொழிற்துறை பிரபலங்களை அடக்கிய நடுவர் குழு ஜனசக்தி Full Option Appathon சவால் மாபெரும் இறுதிப் போட்டியில் நடுவர் பணியை வகித்திருந்தது. நிகழ்வில் கலந்துகொண்ட இறுதிப்போட்டியாளர்களின் ஐந்து படைப்பாக்கங்கள் மற்றும் பயன்பாட்டு (app) விளக்கமளிப்புக்களை நேரடியாக மதிப்பீடு செய்து வெற்றியாளர்களை அவர்கள் தீர்மானித்தனர்.  

“While Loop” அணிக்கு வெற்றியை ஈட்டித்தந்த தீர்வான “Take Me There” என்று அழைக்கப்படுகின்ற மோட்டார் வாகனப் பாவனையைப் பகிர்ந்து கொள்ளும் முறைமையானது, வாகனத்தைப் பகிர்ந்துகொள்ளும் பொதுவான நடைமுறைக்கும் அப்பால் சிறந்ததொரு தீர்வாக முன்வைக்கப்பட்டிருந்ததுடன், போட்டியின் தொனிப்பொருளுக்கு அமைவாக, மிகவும் திறன்மிக்கத் தீர்வாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .