2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

டக்ளஸ் அன்ட் சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் இலங்கையில் சிறந்த பணியகங்களுள் ஒன்றாக தெரிவு

S.Sekar   / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

டக்ளஸ் அன்ட் சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் இலங்கையில் Great Place to Work® முன்னெடுத்த சுயாதீன ஆய்வுகளின் அடிப்படையில் சிறந்த பணியகங்களுக்கு வழங்கப்படுகின்ற Great Place to Work® என்று சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. Great Place to Work® மூலமாக முன்னெடுக்கப்பட்ட அநாமதேய கணக்கெடுப்பில் அதன் ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட விரிவான மதிப்பீடுகளின் அடிப்படையில் டக்ளஸ் அன்ட் சன்ஸ் நிறுவனம் இந்த தனித்துவமான சிறப்பினைச் சம்பாதித்துள்ளது.

இந்த சான்று அங்கீகாரம் குறித்து டக்ளஸ் அன்ட் சன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும்/ முகாமைத்துவப் பணிப்பாளருமான சரோஜ் பெரேரா கருத்து வெளியிடுகையில், 'பொதுவாகவே வணிகங்களுக்கு மிகவும் சவால்மிக்க ஒரு காலகட்டத்தில், அதுவும் குறிப்பாக ஊழியர்களும், தொழில்தருநர்களும் மிகவும் சிறந்த மட்டங்களில் செயற்பட வேண்டிய ஒரு பேரழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஒரு நிலைமையில் இந்த சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளமை எமக்கு மிகுந்த பெருமையளிக்கின்றது. எங்கள் ஊழியர்களே எங்கள் மிகவும் பெறுமதிமிக்க சொத்து என்று நாங்கள் நம்புவதுடன், இந்த சான்று அங்கீகாரமானது நாங்கள் நிச்சயமாக அனைவரும் விரும்புகின்ற ஒரு தொழில்தருநர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது எங்கள் ஊழியர்கள் தங்கள் திறனை முழுமையாக வெளிக்கொணர்ந்து, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய இடமளிக்கிறது.' என்று குறிப்பிட்டார்.

'டக்ளஸ் அன்ட் சன்ஸ் நிறுவனம் தன்னை மதிப்பீடு செய்யும் வாய்ப்பிற்காக ஊழியர்களின் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் நாடியதை நாம் பாராட்டுகிறோம்,' என்று இலங்கையில் Great Place to Work® நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கேஷானிகா ரத்நாயக்க குறிப்பிடடார். 'இந்த தர மதிப்பீடுகள் அதன் சொந்த ஊழியர்களின் நம்பிக்கையை சம்பாதிப்பதற்கான திறனை அளவிடுகின்றன மற்றும் ஒரு சிறந்த பணியிடத்தை தோற்றுவிக்கின்றன. டக்ளஸ் அன்ட் சன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு அல்லது அந்த நிறுவனத்துடன் வணிகம் செய்யும் எவரும் உயர் செயல்திறனின் குறிகாட்டியாக கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அளவீடுகளாக இவை காணப்படுகின்றன,' என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .