Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 11 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் பெண்கள் மத்தியில் தொழில்முயற்சியாண்மையை அதிகரிப்பதன் மூலம், அவர்களின் பங்களிப்பை இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாட்டுக்குப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், டேவிட் பீரிஸ் குழும நிறுவனத்தினால் இலங்கையில் முதற்தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான பஜாஜ் முச்சக்கரவண்டி தொழில்நுட்பப் பயிற்சியை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், வட மாகாணத்தில் மூன்றுநாள் செயலமர்வொன்று அண்மையில் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இம்முறை, இந்தச் செயலமர்வில் சுமார் 30 பெண்கள் கலந்துகொண்டதுடன், உணவு, குடிபானங்கள் உட்பட இதற்கு தேவையான அனைத்து வசதிகளும் டேவிட் பீரிஸ் குழும நிறுவனத்தின் சமூக நலன்புரிக் குழுவினால் வழங்கப்பட்டது. தொழில்நுட்ப பயிற்சியின் மூலம் பெண்களை வலுவூட்டல் என்று இந்த நிகழ்வுக்குப் பெயரிடப்பட்டிருந்தது.
பஜாஜ் வாகன விற்பனையில் சுமார் 40 வருட அனுபவத்தைக் கொண்டுள்ள டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி லிமிட்டெட்டின் வடமாகாணம் முழுவதும் பரவியிருக்கும் சந்தைப்படுத்தல், சேவை மற்றும் உதிரிப்பாக வணிகர்கள் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட இந்தப் பெண்களுக்கென, கிளிநொச்சியில் நடைபெற்ற மேற்படி மூன்றுநாள் செயலமர்வின் பின்னர், இரு மாதங்களுக்கு அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது.
பிரதான தொழில்நுட்ப பயிற்சி அமர்வின் பின்னர், இந்தப் பெண்களுக்குக் குறிப்பாக, முச்சக்கரவண்டி தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுவதுடன், அதற்கு மேலதிகமாக, மோட்டார் சைக்கிள் மற்றும் சாதாரண மோட்டார் தொழில்நுட்ப அறிவையும் வழங்கும் வகையிலான பயிற்சியொன்றும் சம்பந்தப்பட்ட பிரதேசத்திலுள்ள டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி லிமிட்டெட்டின் சேவை வணிகர்களுக்கு இணைந்த வகையில் நடத்தப்படுகிறது.
அதன்பின்னர், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ரன்ன பிரதேசத்தில் அமைந்துள்ள டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (லங்கா) லிமிட்டெட்டின் பஜாஜ் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒருங்கமைத்தல் வளாகத்தில் வழங்கப்படும் பயிற்சிகளின் பின்னர், சுயதொழிலாக முச்சக்கரவண்டி திருத்தும் ஸ்தாபனமொன்றை ஆரம்பிப்பதற்கோ அல்லது அவ்வாறான நிறுவனமொன்றுடன் இணைந்து தொழிலொன்றை ஆரம்பிக்கவோ கூடிய திறனொன்று இந்தப் பெண்களுக்குக் கிடைக்கும்.
சுய தொழில்முயற்சியொன்றை ஆரம்பிக்கும் பெண்களுக்கு, அது தொடர்பிலான தொழில்முயற்சி அறிவை வழங்குவதற்கும் டேவிட் பீரிஸ் குழும நிறுவனம் செயற்பட்டு வருகிறது.
23 Jul 2025
23 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jul 2025
23 Jul 2025