Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இலங்கை தகவல் தொழில்நுட்ப துறையின் சம்மேளனம் (FITIS) தனது புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக அருண அல்விஸை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதனூடாக, நாட்டின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறைக்கு எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியான புதிய நிகழ்ச்சிகளினூடாக பிராந்திய, சர்வதேச தொடர்புகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளது.
இந்தச் சம்மேளனத்தின் தன்னேற்புத் திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்தப் புதிய நியமனம் அமைந்துள்ளதுடன், அடுத்த சில மாதங்களில் FITIS இனால் அமர்வுகள், பயிற்சிகள், போட்டிகள், கண்காட்சிகள் போன்றன ஏற்பாடு செய்யப்படவுள்ளதுடன், இவற்றினூடாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள், துறையின் திறன், ஆற்றல்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில், துறைசார் பயிற்சிப் பட்டறைகள், அமர்வுகள் பிரதான தகவல் அதிகாரிகள், தொழில்நுட்ப அதிகாரிகளை இலக்காகக் கொண்டமைந்துள்ளதுடன், தொழில்நுட்பம்சார் பயிற்சித் திட்டங்கள், INFOTEL போன்ற தேசிய ICT கண்காட்சிகள், மாணவர் தொடர்பான தொழில்நிலை அபிவிருத்தித் திட்டங்கள், பெண்களுக்கான ICT அறிவு விருத்தி திட்டங்கள், வியாபார தொடர்பு அமர்வுகள், ICT மாணவர்களுக்கான புத்தாக்க போட்டிகள், பயிற்சி நிகழ்வுகள் போன்றன அடங்கியுள்ளன.
FITIS உடன் இணைந்து கொள்கின்றமை தொடர்பாக அல்விஸ் பெரும் எதிர்பார்ப்புடன் திகழ்வதுடன், அது பற்றி குறிப்பிடுகையில், “சகல பங்காளர்களுடன் கைகோர்த்து செயலாற்ற நான் எதிர்பார்ப்பதுடன், அதனூடாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையின் சகல பிரிவுகளிலும் சேவைகளை கட்டியெழுப்பி, கவர்ந்திழுத்து, தக்க வைத்துக்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .