2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தங்கொட்டுவ போர்சலேன் பிஎல்சிக்கு விருது

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2019 நிகழ்வில், இரசாயனப் பொருட்கள், செரமிக் மற்றும் கண்ணாடி பிரிவுகளில் சிறந்த உற்பத்தியாளருக்கான விருது தங்கொட்டுவ போர்சலேன் பிஎல்சிக்கு வழங்கப்பட்டிருந்தது.  

சொகுசான மற்றும் கண்கவர் போர்சலேன் மேசைப் பாவனை தயாரிப்புகளுக்கு சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற தங்கொட்டுவ போர்சலேன், உலகளாவிய ரீதியலும், இலங்கையிலும் மில்லியன் கணக்கானவர்களின் முதல் தர தெரிவாக அமைந்துள்ளன.

Ambeon ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமாக திகழ்வதுடன், ஐரோப்பிய தயாரிப்பு அலங்கார விருதுகள் 2017 நிகழ்வில் catering products/tabletop specialties பிரிவில் வெண்கல விருதை பெற்றிருந்தது.

தங்கொட்டுவ போர்சலேன் பின்பற்றி வரும் உயர் தரத்தினூடாக நிறுவனத்துக்கு இந்த கௌரவிப்பு பெறப்பட்டுள்ளது.

நிறுவனத்தை பொறுத்தமட்டில் 2019 ஆம் ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. NCE ஏற்றுமதி விருதுகள் 2019 இல் தங்க விருதை சுவீகரித்திருந்ததுடன், ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2018/19 நிகழ்வில் செரமிக் மற்றும் போர்சலேன் தயாரிப்புகள் பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருதை வென்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .