2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தங்க விருதை வென்ற சமபோஷ

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய விவசாய வர்த்தக சபையின் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டு அண்மையில் BMICH இல் இடம்பெற்ற 'தேசிய விவசாய வணிக விருது 2015' நிகழ்வில் உணவு பதனிடல் துறையில் ஆற்றியுள்ள பங்களிப்பு மற்றும் செயற்திறனை அடையாளப்படுத்தும் வகையில் பிளென்டி ஃபூட்ஸ்(பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் சமபோஷ வர்த்தகநாமத்திற்கு சிறந்த விவசாய உற்பத்தியாளர் பிரிவில் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி பிஸ்கட் மற்றும் இனிப்பு உற்பத்தியாளரான சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் (CBL) நிறுவனத்திற்கு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ்(பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் மூலம் உள்நாட்டில் விளையும் மூலப்பொருட்களை பயன்படுத்தி சமபோஷ உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சமபோஷ உற்பத்திக்கான மூலப்பொருட்களை நாடுமுழுவதும் உள்ள 8000 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் விநியோகித்து பயன்களை பெற்று வருவதுடன், எமது விவசாய பொருளாதாரத்திற்கு வலுவூட்டுவது மட்டுமன்றி, தேசத்தின் விவசாயச் சமூகத்தினரின் வாழ்க்கை தரத்தின் மேம்பாட்டுக்கும் பங்களிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

பிளென்டி ஃபூட்ஸ்(பிரைவட்) நிறுவனம் என்பது இலாபநோக்காக மட்டுமன்றி, அர்ப்பணிப்புமிக்க விவசாய சமூகத்தினரின் நல்வாழ்வு கருதியும் செயற்பட்டு வருகிறது. கடந்த 2012 இல் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட 'கொவி பவுல' செயற்திட்டமானது கிராமிய விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தும் நிறுவனத்தின் பிரதான கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு திட்டமாக விளங்குகிறது. இந்த செயற்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவையான வழிகாட்டல்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான ஆதரவு போன்றவற்றை வழங்கும் நோக்கில் 'கொவி சதுட்ட', 'கொவி சரண', 'கொவி தெனும', கொவி அரண' மற்றும் 'கொவி சுவய' போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிறுவனம் மற்றும் விவசாய சமூகத்திற்கிடையிலான வலிமையான உறவு தொடர்பில் கருத்து தெரிவித்த பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான ஷம்மி கருணாரத்ன, 'விசேடமான கொள்கைளை பின்பற்றி எமது நாட்டின் விவசாயத்துறையை விருத்தி செய்வதுடன், நியாயமான முறையில் எமது விவசாய சமூகத்தினரை வெளிப்படுத்துவதே எமகு நோக்கமாகும். எமது விவசாயிகளுடனான உடன்படிக்கைக்கமைய, சந்தை விலையானது ஒப்பந்த விகிதத்தை விட உயர்வடைந்தால் அதே அதிகரித்த சந்தை விலையை நாம் அவர்களுக்கு செலுத்தி வருகிறோம். அதேபோன்று, சந்தை விலை குறைவடையும் போது உறுதியளித்த அதே விலையை செலுத்துகிறோம்' என்றார்.

விவசாயிகளினால் வழங்கப்படும் மூலப்பொருட்களின் தரம் மற்றும் நலச்செழுமை ஆகியவை நவீன இயந்திரங்களை பயன்படுத்தப்படும் சமபோஷவின் பூரண உற்பத்தி செயல்பாட்டில் மேலும் மேம்படுத்தப்படுகிறது.

விவசாயிகளின் நல்வாழ்வை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நன்குணர்ந்த பிளென்டி ஃபூட்ஸ்(பிவைட்) லிமிடெட் நிறுவனம்  அண்மையில் அறிமுகம் செய்ய கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு திட்டமான 'கொவி சுவய' திட்டம் ஊடாக விவசாயச் சமூகத்தினரின் சுகாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. 'பெரும்பாலான விவசாயிகள் தமது ஒரே வாழ்வாதாரமான விவசாயத்துடன் ஒன்றிணைந்துள்ளமையால், தமது சுகாதாரம் குறித்து புறக்கணித்து வருகின்றனர். விவசாய குடும்பத்தின் குதூகலத்திற்கு 'கொவி சதுட்ட' திட்டம், அவசியமான தருணங்களில் கைகொடுக்க 'கொவி சரண' திட்டம், விவசாய அறிவினை மேம்படுத்த 'கொவி தெனும' திட்டம் மற்றும் உள்கட்டடுமான வசதிகளுக்கான உதவிகள் மற்றும் சமய கலாச்சார அபிவிருத்திக்காக 'கொவி அரண'; திட்டம் போன்றன 'கொவி பவுல' எனும் எமது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களாகும்' என கருணாரத்ன குறிப்பிட்டார்.

எமக்கு சொந்தமான மண் ஊட்டமளிப்பை எமது நாட்டிற்கு மட்டுமன்றி, உலகளாவிய ரீதியில் 25 நாட்டிற்கும் மேலாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் வென்ற முன்னணி உற்பத்தியாளரான சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ்(பிரைவட்) நிறுவனம, விவசாய சமூகத்தினருக்கும், அதன் பெருமைக்குரிய வாடிக்கையாளருக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X