2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தரமான திறன்பேசிகள் முக்கியமானவை

Gavitha   / 2016 ஒக்டோபர் 18 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

Huawei அலைபேசிகள் அவற்றின் தரத்திற்குப் பெயர் பெற்றுள்ளதுடன், அண்மையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது, Huawei அலைபேசிகள் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதுக்கு முன்பாக பல்வேறு தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவதை மீளவும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.   

உலகில் திறன்பேசிகளை உற்பத்தி செய்வதில் முதல் மூன்று இடங்களில் திகழும் நிறுவனங்களில் ஒன்றான Huawei தனது வன்பொருள் மற்றும் மென்பொருளை தொடர்ச்சியாக நேர்த்தி செய்து வந்துள்ளது மட்டுமன்றி, மிகச் சிறந்த தரத்திலான ஸ்மார்ட்போன்களை வழங்கும் தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளையும், உற்பத்தி நடைமுறைகளையும் தொடர்ச்சியாக மேம்படுத்துவதில் பாரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. Huawei கைக்கொள்கின்ற உலகத்தரம் வாய்ந்த தர நடைமுறைகள் ஐரோப்பா அல்லது அமெரிக்காவிலுள்ள கட்டாயமான தர நடைமுறைகளை விடவும் மிக உயர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.   

இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு கூறுகையில், “தரம் தொடர்பில் சந்தையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்ற கொள்கை எப்போதும் Huaweiஇற்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது.”

தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலமாக Huawei தொடர்ச்சியாகத் தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வந்துள்ளது. இலங்கையிலும், உலகெங்கிலும் எமது வெற்றிக்கு இதுவே முக்கியமான ஒரு காரணமாகும். நாம் எமது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீது தொடர்ந்தும் முதலிட்டு, எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த தர அனுபவத்தை வழங்குவோம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X