Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ் தனது பருத்தித்துறை பிராந்திய அலுவலகத்தை மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக அண்மையில் மெருகேற்றம் செய்திருந்தது. நாடு முழுவதும் முழுமையாக செயலாற்றல் திறன் வாய்ந்த கிளைகளைக் கொண்டிருப்பது எனும் நிறுவனத்தின் இலக்குக்கு அமைவாக இப் புதிய கிளை அமைந்துள்ளது.
பருத்தித்துறைக்கிளை, பெருமளவு வாகன தரிப்பிட வசதிகளுடன் மு.ப. 8.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை திறந்திருக்கும். ஆயுட் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கக்கூடிய பகுதிகள், ஊழியர்களுக்கான பயிற்சி நிலையங்கள் மற்றும் ஏனைய முக்கியமான வாடிக்கையாளர் வசதிகள் போன்றவற்றை எவ்வேளையிலும் வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது.
யூனியன் அஷ்யூரன்ஸின் கிளை அலுவலகங்களின் மூலமாக தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள் ஆகியவற்றுக்கு பெருமளவு ஆயுட் காப்புறுதி தீர்வுகள் வழங்கப்படுகின்றன. கிளை தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளதுடன், இதன் மூலம் பிரத்தியேக நிதி ஆலோசகர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் டப்லெட்கள் போன்ற சேவைகளை வழங்கக்கூடிய வகையில் காணப்பட்டது.
மெருகேற்றம் செய்யப்பட்டுள்ள கிளை, இல. 357/1, பிரதான வீதி, பருத்தித்துறை எனும் முகவரியில் அமைந்துள்ளது.
40 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
3 hours ago