2025 மே 21, புதன்கிழமை

‘திரி திவிய’ திட்டத்தை முன்னெடுத்த பீப்பள்ஸ் லீசிங் வவுனியா கிளை

Editorial   / 2018 ஜூன் 14 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதல் தர வங்கிசாரா நிதிச்சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங், வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வியாபார சமூகத்தின் மேம்பாட்டைக் கவனத்தில் கொண்டு, திரி திவிய சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் ஆறாவது அமர்வை அண்மையில் முன்னெடுத்திருந்தது.  

இந்த நிகழ்வை பீப்பள்ஸ் லீசிங் வவுனியா கிளை ஏற்பாடு செய்திருந்ததுடன், வவுனியா நெல்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் வவுனியா மாவட்ட செயலாளர், பொலிஸ் போக்குவரத்துப் பொறுப்பதிகாரி, துறை மற்றும் சேவைகள் சபை முகாமையாளர், அனுராதபுரம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதில் ஆளுநர் மற்றும் பெருமளவான விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.  

முல்லைத்தீவு, ஓமந்தை, மல்லாவி மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 161 பேர் இந்தத் திரி திவிய சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.  

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் ஐந்து கட்டச் சமூகப் பொறுப்புணர்வுக் கொள்கையில், தொழில் முயற்சியாண்மை மற்றும் நிதிசார் அறிவுமட்டம் ஆகியவற்றைச் சிறிய, நடுத்தர அளவு தொழில்முயற்சியாளர்கள் மத்தியில் மேம்படுத்துவது என்பதும் அடங்கியுள்ளது. திரி திவிய சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம், இந்தக் கொள்கை அம்சத்துக்குப் பங்களிப்பு வழங்குவதுடன், பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தால் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படுகிறது. சமூகப் பொறுப்புணர்வு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபார சமூகத்தின் நலன் கருதி, இந்தச் செயற்திட்டத்தை முன்னெடுக்கிறது.  

வவுனியாவின் திரி திவிய திட்டம், நபர் ஒருவரை வெற்றிகரமான தொழில்முயற்சியாளர், வியாபார முகாமைத்துவ முன்னோடி, நிதி முகாமைத்துவம், வரி ஒதுக்கீடு, கணக்குகளைப் பேணல் மற்றும் வியாபார அறிக்கையிடல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது.  

இந்த ஒரு நாள் அமர்வின் போது, பல விளக்கங்கள், சந்திப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்றன வியாபாரப் பிரமுகர்களுடன் இடம்பெற்றதுடன், தொழில் முயற்சியாளராக எதிர்கொள்ளக்கூடிய வெவ்வேறு சவால்களைப் பற்றி விளக்கும் வகையிலும் அமைந்திருந்தது.  

இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த அனைவருக்கும் பெறுமதி வாய்ந்த சான்றிதழ் மற்றும் நிகழ்வில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய கையேடு ஆகியன வழங்கப்பட்டன.  

வவுனியா பீப்பள்ஸ் லீசிங் முகாமையாளர் கே. கமலாகரன் இந்நிகழ்வில் உரையாற்றும் போது, திரி திவிய திட்டத்தினூடாக பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்கள் மற்றும் வவுனியாவின் தொழில்முயற்சியாளர்களுக்கு வழிகாட்டல்களைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தாம் எண்ணியுள்ளதாகக் குறிப்பிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .