S.Sekar / 2022 மார்ச் 07 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கதிரவன் எஸ்.எஸ்.குமார்

மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய சேமிப்பு வங்கி திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வுகள் சனிக்கிழமை (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள்ள சிலிங்கோ நிறுவன கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
தேசிய சேமிப்பு வங்கி திருகோணமலை கிளை உதவி முகாமையாளர் திருமதி நிரோஷினி ரமேஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் கிரியெல்ல, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுவர்ணா தீபாணி, திருகோணமலை பொலிஸ் தலைமையக பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஜி.குணவர்த்தன, வங்கியின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் சி.சிவசொருபன், கந்தளாய் கிளை முகாமையாளர் எஸ்.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வங்கி வாடிக்கையாளர்களின் அனுபவம் பகிரப்பட்டதுடன் அரங்க ஆற்றுகையும் நிகழ்த்தப்பட்டது. ஷெரின் சித்திரா என்ற வாடிக்கையாளருக்கு ரூ. 3 மில்லியன் தனிநபர் கடனுக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெண் வாடிக்கையாளர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.


1 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
8 hours ago