Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 08 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியின் கீழ் சமாதானத்தை கட்டியெழுப்பும் நிகழ்ச்சிகளுக்கான கேட்டலிடிக் ஆதரவு திட்டத்தின் சில மைல்கற்களை கொண்டாடும் முகமாக திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்திலமைந்துள்ள மூதூர், சூடைக்குடா, கடற்கரைச்சேனை ஆகிய கிராமங்களில் வாழும் மீள்குடியேற்ற சமுதாயத்தினர் சமீபத்தில் ஒன்று திரண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் போது கலந்து கொண்ட திருகோணமலை மாவட்டத்துக்கான உதவி மாவட்ட செயலாளர்
என். பிரதீபன், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியின் கீழ் சமாதானத்தை கட்டியெழுப்பும் நிகழ்ச்சிகளுக்கான கேட்டலிடிக் ஆதரவு திட்டத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் முகமட் முசைன், ஏனைய அரச உத்தியோகத்தர்கள் என்பவர்களின் பிரசன்னத்தில் மூதூர் பிரதேசத்தில் வாழும் சமுதாயத்தினருக்கு அவர்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்த தேவையான கூட்டுறவு வசதிகள் வழங்கப்பட்டன.
குறிப்பிடப்பட்ட நாளன்று, மூதூர் கிழக்கு மீனவர் ஒன்றிய கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வலைகள், எஞ்சின்கள், மீன் கண்டுபிடிப்பான்கள், ஜிபிஎஸ் சாதனங்கள் உள்ளடங்கலாக பல படகுகள், மீன்பிடி கியர்கள் என்பனவும் மீனவ சமுதாயங்களுக்குச் சூடைக்குடா கடற்கரை பிரதேசத்தை இலகுவில் அடையத்தக்க வகையில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட வீதியொன்றும் கையளிக்கப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியின் கீழ் இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கான கேட்டலிடிக் ஆதரவு திட்டத்தின் கீழேயே இந்தச் சமுதாயத்தினருக்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் இது UNICEF, UN-Habitat ஆகியவற்றின் கூட்டாண்மையில் அரச மற்றும் அரச சார்பற்ற பங்குதாரர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட - 8.1 மில்லியன் நிதித்திட்டமாகும்.
26 minute ago
28 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
39 minute ago