2026 மே 07, வியாழக்கிழமை

தேசிய மாநாட்டில் எஸ்கிமோ பிரகாசிப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரையறுக்கப்பட்ட எஸ்கிமோ பெஷன் நிட்வெயார் தனியார் நிறுவனம், சர்வதேச சந்தைக்கு தரம் மிக்க பின்னலாடை உற்பத்திகளைத் தயாரிப்பதில் ஈடுபடும் நிறுவனமாகும். அண்மையில் இடம்பெற்ற 2016 இன் தரம் மற்றும் உற்பத்தித் திறனாற்றல் மாநாட்டில் இந்த நிறுவனம் 2ஆவது இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது. 'தரத்துக்கும் உற்பத்தித் திறனாற்றலுக்கும் அப்பால்' எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிறுவனம், தனது கூட்டாண்மைப் பயணத்தில் முதற் தடவையாக இத்தகையப் போட்டிக்கு முகம் கொடுத்து தங்கப் பிரிவில் 2ஆம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு மேலதிகமாக, மூன்று வெள்ளி விருதுகள், ஒரு வெண்கல விருது என்பனவும் கிடைத்துள்ளன. தரம் மற்றும் உற்பத்தித் திறனாற்றல் ஊக்குவிப்புக்கான இலங்கை சங்கம் நாடு தழுவிய ரீதியில் வருடாந்தம் இந்தப் போட்டியை நடத்தி வருகின்றது. நாட்டில் உள்ள 50 பிரதான கூட்டாண்மை நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.

'இந்த கீர்த்திமிக்க நிகழ்வில் ஐந்து விருதுகள் எமக்குக் கிடைத்துள்ளமை மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. எமது முயற்சிகளுக்கு அங்கிகாரம் அளித்த தரம் மற்றும் உற்பத்தித் திறனாற்றல் ஊக்குவிப்புக்கான இலங்கை சங்கத்துக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். எமது கடின உழைப்பு, அர்ப்பணம் என்பன மூலம் ஒருமித்த ஒரு இலக்கை நாம் அடைந்துள்ளோம். இது எஸ்கிமோ கடந்த வருடத்தில் அறிமுகம் செய்த மொத்த தர முகாமைத்துவத்துக்கு கிடைத்த அளப்பரிய வெற்றியாகும்.

எமது ஊழியர்களுக்குத் தேவையான ஆற்றல்களை வழங்க நாம் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இது அவர்களுக்கும், நிறுவனத்திற்கும் பெறுமதி சேர்ப்பதாக அமையும். நிறுவனத்தின் தூர நோக்கை அடைய இது நிச்சயம் வழிவகுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சர்வதேச ரீதியாக முதல்தர உற்பத்திச் செயற்பாடுகளைக் கொண்ட நிறுவனமாக எஸ்கிமோவை தலை நிமிர்ந்து நிற்கச் செய்வதே எமது தூரநோக்காகும்' என்று நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மணிக் சந்தியாப்பிள்ளை விளக்கமளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .