Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 16 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையைச் சேர்ந்த மீனவ மற்றும் விவசாய குடும்பங்களுக்கு 80 மீன்பிடி படகுகள், 400 மீன்பிடி வலைகள், 30 மின்சார நீர் பம்பிகள் மற்றும் 30 மண்ணெண்ணெய் நீர் பம்பிகள் போன்றவற்றை துருக்கி வழங்கியுள்ளது. கிண்ணியாவில் அமைந்துள்ள பொது நூலகத்தில் இந்த அன்பளிப்பு நிகழ்வு நேற்று ஞாற்றுக்கிழமை (16) நடைபெற்றது.
துருக்கி அரசாங்கத்தின் அபிவிருத்திப் பிரிவான துருக்கி சர்வதேச கூட்டாண்மை மற்றும் ஒன்றிணைவு முகவர் அமைப்பினால் இந்த மீன்பிடி மற்றும் விவசாய சாதனங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில், துருக்கியின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். இலங்கையில் வெவ்வேறு காலப்பகுதியில் அபிவிருத்தி மற்றும் மீளக்கட்டியெழுப்பும் உதவிகளை துருக்கி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
51 minute ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
5 hours ago
6 hours ago