Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த நத்தார் பண்டிகையை நீங்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பல்வேறு சுவைமிகு தெரிவுகளை ரேணுகா ஃபூட்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. பேஸ்புக் போட்டிகள் ஊடாக மனநிறைவான பொருட்தெரிவுகளைக் கொண்ட கொண்டாட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
“Richlife உடன் இணைந்து விருப்பை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்” என்பதே அந்த அரிய வாய்ப்பாகும். நத்தார் கொண்டாட்டங்களுக்கு நீங்கள் தயாராகும் விதம் அல்லது உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தினருடனும் கேக் கலவையைக் கலத்தல் அல்லது கிறிஸ்துமஸ் மரத்தில் அலங்காரங்களைக் காட்சிப்படுத்தல் ஆகிய புகைப்படங்களையோ அல்லது செல்ஃபிகளையோ ரூ.100,000 தொகைக்கு மேற்படாத விருப்பப் பட்டியலுடன் தமக்கு அனுப்பி வைக்குமாறு நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறந்த புகைப்படத்திற்கான வெற்றியாளர் டிசெம்பர் மாதம் 27ஆம் திகதி Richlife பேஸ்புக் பக்கத்தினூடாக அறிவிக்கப்படும். “Season’s Greetings with Mr.Pop” போட்டியின் ஊடாக ஆக்கபூர்வமான வீடியோ வாழ்த்துக்களை அனுப்பி 4 அற்புதமான 32 அங்குல தொலைக்காட்சிகளில் ஒன்றினை வெல்லலாம். Mr.Pop பேஸ்புக் பக்கத்துக்குச் சென்று இப்போட்டி பற்றிய பங்குபற்றல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த இரு மாதங்களாகத், தனது மிகச்சிறந்த உணவு செய்முறைகளை அனுப்பி வரும் ஆக்கத்திறன் மிக்க சமையல் நிபுணர்களின் உணவு செய்முறைகள், Rainers பேஸ்புக் பக்கத்தில் இடம்பெறுவதுடன், வெற்றியாளருக்கு தாம் கனவு காணும் கவர்ச்சிகரமான பேக்கிங் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
Jack Mackerel, Tuna Chunks, Tuna Spreads மற்றும் சோயா போன்ற Captain வர்த்தகநாமத்தைக் கொண்ட உற்பத்திகளைப் பயன்படுத்தி செய்யப்படும் உணவு செய்முறைக் கொண்ட சிறிய வீடியோக்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதில் மிகச்சிறந்த வீடியோவானது Captain பக்கத்தின் “Culinary Showtime” நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்படும். ஜனவரி மாத முற்பகுதி இப்போட்டிக்கான இறுதித்திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025